MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • விஜயாவுக்கு விபூதியடித்த நீத்து... மனோஜை ஆள் வைத்து ஏமாற்றிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

விஜயாவுக்கு விபூதியடித்த நீத்து... மனோஜை ஆள் வைத்து ஏமாற்றிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் நீத்துவிடம் மனோஜை கல்யாணம் பண்ணிக் கொள்ளுமாறு கேட்க சென்ற விஜயாவுக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 23 2026, 02:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Siragadikka Aasai Serial
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜுக்கு எப்படியாவது ரோகிணியிடம் இருந்து டைவர்ஸ் வாங்கிவிட்டு, இரண்டாம் திருமணம் செய்துவைக்க வேண்டும் என முடிவெடுத்துள்ள விஜயா, அதற்காக சிந்தாமணியின் உதவியை நாடி இருக்கிறார். இருவரும் பணக்கார பெண்ணை தேடி வருகிறார்கள். அப்போது தான் விஜயாவுக்கு நீத்துவை பெண் கேட்கலாம் என்கிற ஐடியா வருகிறது. இதையடுத்து இருவரும் கிளம்பி நீத்துவின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். அங்கு நீத்துவிடம் பேசுகிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
நீத்துவை பெண் கேட்கும் விஜயா
Image Credit : jiohotstar

நீத்துவை பெண் கேட்கும் விஜயா

நீத்து அவர்களிடம் முழுக்க முழுக்க ரவியை பற்றி தான் பேசுகிறார். ஆனால் அவரிடம் விஜயா தன் மூத்த மகன் மனோஜை பற்றி பெருமையாக பேசுகிறார். அதையெல்லாம் கேட்கும் நீத்து, ரவி இதெல்லாம் ஏற்கனவே என்கிட்ட சொல்லிருக்கான் என சொல்ல, என்ன இவ எது பேசுனாலும் ரவியை கொண்டுவர்றா என நினைத்து, நேரடியாக விஷயத்துக்கு வருகிறார். என்னோட மகன் மனோஜை நீ கல்யாணம் பண்ணிக்கிறியா என விஜயா நேரடியக நீத்துவிடம் கேட்கிறார். அதைக்கேட்டு சிரிக்கும் நீத்து, அதற்கு வாய்ப்பே இல்லை, ஏன்னா நான் ஏற்கனவே ரவியை காதலிக்கிறேன் என சொல்கிறார்.

36
பல்பு கொடுத்த நீத்து
Image Credit : jiohotstar

பல்பு கொடுத்த நீத்து

அதற்கு விஜயா, ரவிக்கு தான் ஏற்கனவே ஸ்ருதியோடு கல்யாணம் ஆகிடுச்சேம்மா என சொல்ல, அதற்கு நீத்து, அவங்க இப்போ பிரிஞ்சு தான இருக்காங்க. பேசாம நீங்க ரவிக்கும் ஸ்ருதிக்கும் டைவர்ஸ் வாங்கிக் கொடுத்திருங்க, நான் ரவியை கல்யாணம் பண்ணிக்கிறேன் என நீத்து சொன்னதைக் கேட்டதும் அவரை செருப்பெடுத்து அடிக்க வேண்டும் என உள்மனசுக்குள் நினைக்கிறார் விஜயா. பின்னர் இது சரிப்பட்டு வராது என முடிவெடுத்து அங்கிருந்து கிளம்புகிறார் விஜயா. வெளியே வந்து சிந்தாமணியிடம், இந்த பொண்ணு என்ன சரியான லூசா இருக்கும் போல என திட்டுகிறார்.

46
ஜோசியம் பார்க்கும் மனோஜ்
Image Credit : jiohotstar

ஜோசியம் பார்க்கும் மனோஜ்

மறுபுறம் மனோஜின் ஷோரூமிற்கு கைரேகை ஜோசியம் பார்க்கும் பெண் ஒருவர் வருகிறார். அவர் மனோஜுக்கு குறி சொல்ல வந்திருப்பதாக சொல்ல, முதலில் அவர் மறுக்கிறார். பின்னர் அவருக்கு திருமணமாகி விவாகரத்து வரை சென்றுள்ள விஷயத்தை எல்லாம் அந்த பெண் புட்டு புட்டு வைக்க, எல்லாம் கரெக்டா சொல்றாங்களே என குறி கேட்க அமர்கிறார். அப்போது தனக்கு இன்னொரு கல்யாணம் செய்யும் யோகம் இருக்கிறதா என அந்தப் பெண்ணிடம் மனோஜ் கேட்க அதற்கு அவரோ, நிச்சயம் இருக்கு, ஆனால் உங்களுடைய மனைவி கூட தான் உங்களுக்கு மறுபடியும் கல்யாணம் நடக்கும் ஒரு குண்டை போடுகிறார்.

56
ரோகிணியின் செட் அப்
Image Credit : jiohotstar

ரோகிணியின் செட் அப்

இதைக்கேட்டு கடுப்பான மனோஜ், நீங்க முதல்ல கிளம்புங்க என சொல்லி அந்த பெண்ணை அனுப்பி விடுகிறார். அதன்பின்னர் வெளியே சென்ற அந்த ஜோசியக்கார பெண், நேராக ரோகிணியை சந்திக்கிறார். அதன்பின்னர் தான் தெரியவருகிறது, அவர் ரோகிணி செட் பண்ணி அனுப்பியவர் என்று, மனோஜிடம் நான் சொன்னபடி சொன்னீங்களா என ரோகிணி கேட்க, அதெல்லாம் பக்காவா சொல்லிட்டேன் என அந்த பெண் கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார். அந்தப் பெண் ரோகிணி அனுப்பியவர் என்று தெரியாத மனோஜ், குழம்பிப் போய் இருக்கிறார்.

66
மகளை கண்டிக்கும் சிந்தாமணி
Image Credit : jiohotstar

மகளை கண்டிக்கும் சிந்தாமணி

மறுபுறம் மீனாவின் தம்பி சத்யா, தன்னுடைய பாஸ் ரேகாவுடன் பைக்கில் மீனா கடைக்கு செல்கிறார். அங்கு சென்ற ரேகா, உங்களிடம் ஒரு டெகரேஷன் ஆர்டர் கொடுக்க வந்திருப்பதாக சொல்லிவிட்டு, தனக்கு மற்றுமொரு பொக்கே வேண்டும், அது ஸ்பெஷலான நபருக்காக என சொன்னதும், மீனாவுக்கு லைட்டாக சத்யா மீது சந்தேகம் வருகிறது. ரேகா, மீனாவிடம் பேசுவதை அங்கு காரில் வந்த சிந்தாமணி பார்த்து, இவகிட்டலாம் எதுக்கு பேசுற என ரேகாவை கேட்க, அது என்னோட விருப்பம் என பதிலடி கொடுக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : பகையை மறந்து பாசமலர்களாக மாறிய பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்... எவிக்‌ஷனில் காத்திருக்கும் அடிபொலி ட்விஸ்ட்
Recommended image2
TV Serials : அதிக நாட்கள் ஓடிய டாப் 10 தமிழ் சீரியல்கள்! 8 வருஷம் ஓடுன அந்த சீரியல் பத்தி தெரியுமா?
Recommended image3
Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து திடீரென விலகிய பிரபலம்... அவருக்கு பதில் இவரா?
Related Stories
Recommended image1
வீட்டை விட்டு விரட்டப்படும் மீனா... விஜயா பிளான் சக்சஸ் - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
Recommended image2
நீத்துவை மருமகளாக்க ஆசைப்படும் விஜயா... அம்மாவால் அல்லல்படப்போகும் ரவி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved