புது சீரியல் வரவால்; 2 முக்கிய சீரியல்களின் நேரத்தை அதிரடியாக மாற்றிய விஜய் டிவி!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி மற்றும் ஆஹா கல்யாணம் சீரியல்களின் ஒளிபரப்பு நேரத்தை தற்போது அதிரடியாக மாற்றி உள்ளனர்.

Vijay TV Serial Timing Changed : சீரியல்களில் சன் டிவிக்கு டஃப் கொடுக்கும் ஒரே சேனல் என்றால் அது விஜய் டிவி தான். கிராமப்புரங்களை சன் டிவி சீரியல்கள் ஆக்கிரமித்தாலும், நகரங்களில் வசிக்கும் மக்கள் அதிகம் விரும்பி பார்ப்பது விஜய் டிவி சீரியல்களை தான். இதனால் தொடர்ந்து சிறகடிக்க ஆசை, மகாநதி, சின்ன மருமகள், பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் என பல்வேறு ஹிட் சீரியல்களை கொடுத்து வருகிறது விஜய் டிவி. இதில் தற்போது புது சீரியல்களும் சில களமிறங்கி உள்ளன.
Poongatru thirumbuma
புது வரவாக வந்த சீரியல்
அப்படி முத்தழகு சீரியலில் நாயகியாக நடித்த ஷோபனா நடிப்பில் புதிதாக உருவாகி வரும் சீரியல் தான் ‘பூங்காற்று திரும்புமா’. இந்த சீரியல் வருகிற ஏப்ரல் 28ந் தேதி முதல் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த புது சீரியலின் வரவால் இரண்டு முக்கிய சீரியலின் நேரத்தை அதிரடியாக மாற்றி உள்ளது விஜய் டிவி. அதன்படி, ரசிகர்களின் பேவரைட் சீரியல்களான மகாநதி மற்றும் ஆஹா கல்யாணம் ஆகிய சீரியல்களின் நேரத்தை விஜய் டிவி மாற்றி இருக்கிறது.
இதையும் படியுங்கள்.... Pandian Stores 2: காதல் விஷயத்தை கூறிய அரசி; சதீஷ் எடுக்கப்போகும் முடிவு என்ன?
Aha Kalyanam
ஆஹா கல்யாணம் சீரியல் நேரம் மாற்றம்
அதன்படி இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ஆஹா கல்யாணம் சீரியல் வருகிற ஏப்ரல் 28ந் தேதி முதல் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக மாலை 6 மணிக்கு நீ நான் காதல் என்கிற சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. அந்த சீரியல் அண்மையில் முடிவடைந்ததால் தற்போது 6 மணிக்கு ஆஹா கல்யாணம் சீரியல் மாற்றப்பட்டு உள்ளது. அதேபோல் 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த மகாநதி சீரியலின் நேரமும் மாற்றப்பட்டு இருக்கிறது.
Mahanathi
மகாநதி சீரியல் டைமிங்கும் மாறுகிறது
மகாநதி சீரியல் இனி மாலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மகாநதி சீரியல் ஒளிபரப்பாகி வந்த 6.30 மணிக்கு, பூங்காற்று திரும்புமா என்கிற புது சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. அண்மையில், தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் அய்யனார் துணை ஆகிய சீரியல்களின் நேரம் மாற்றப்பட்ட நிலையில், தற்போது மேலும் இரண்டு முன்னணி சீரியல்களின் நேரத்தை விஜய் டிவி மாற்றி உள்ளதால், ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... விஜய் டிவியை விட்டு வெளியேறும் பிரியங்கா தேஷ்பாண்டே? - காரணம் என்ன?