- Home
- Career
- College reopen: கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்? இதோ முக்கிய அறிவிப்பு!
College reopen: கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்? இதோ முக்கிய அறிவிப்பு!
2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான கோடை விடுமுறைக்குப் பின் தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறக்கப்படும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விவரங்களை இங்கே சரிபார்க்கவும்.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது! கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி இதுகுறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. பலரும் குடும்பத்துடன் சுற்றுலா சென்று கோடை விடுமுறையை உற்சாகமாக கழித்து வருகின்றனர். முன்னதாக, பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், தற்போது கல்லூரிகள் திறப்பு குறித்தும் அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.
அதில், 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் ஜூன் 2, 2025 (திங்கட்கிழமை) அன்று திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு எப்போது திறக்கப்படும் என்பது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில், இந்த எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின்படி, "2025-2026 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை கல்லூரிகள் ஜூன் 16 ஆம் தேதி திறக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 16 ஆம் தேதி மீண்டும் கல்லூரிகளுக்குச் செல்ல தயாராகலாம். இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறை முடிந்து மீண்டும் கல்விச் சூழலுக்குத் திரும்ப மாணவர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.