MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • விட்டாச்சு லிவு: இனி மேல் ஜாலி தான்! இந்த தேதியில் தான் ஸ்கூல் தொறக்கப்போறங்க! பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

விட்டாச்சு லிவு: இனி மேல் ஜாலி தான்! இந்த தேதியில் தான் ஸ்கூல் தொறக்கப்போறங்க! பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று யோசிக்கிறீர்களா? பள்ளிக் கல்வித்துறை அதிகாரப்பூர்வ தேதியை அறிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு படிக்கவும்!  

1 Min read
Author : Suresh Manthiram
Published : Apr 23 2025, 09:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது பள்ளிக் கல்வித்துறை. 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் வரை நடைபெற்ற நிலையில், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் மாத இறுதியிலும், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதியும் கோடை விடுமுறை துவங்குகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இந்நிலையில், மாணவர்களின் ஆவலோடு காத்திருந்த பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வரும் ஜூன் மாதம் 2 ஆம் தேதி (02.06.2025), திங்கட்கிழமை அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.
 

34

முன்னதாக, 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 24 ஆம் தேதியுடன் பள்ளி இறுதித் தேர்வுகள் முடிவடைய உள்ளன. ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொண்டு தேர்வு முடிவுகளை வெளியிட ஏதுவாக, ஆசிரியர்களுக்கான கடைசி வேலை நாள் ஏப்ரல் 30, 2026 ஆகும்.

44

எனவே, அனைத்து தலைமை ஆசிரியர்களும் ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இதையும் படிங்க: 10ம் வகுப்பு மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்! இந்த கேள்வியை அட்டென்ட் பண்ணினாலே போதும்!

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்
கல்வி
தமிழ்நாடு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Work From Home Jobs : இல்லத்தரசிகளுக்கு ஏற்ற 7 உண்மையான WFH வேலைகள்! டீசன்டான சம்பளம், நம்பகமான வாய்ப்புகள்!
Recommended image2
8th Pay Commission Basic Salary: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்? DA, Fitment Factor, நிலுவைத் தொகை முழு விவரம்
Recommended image3
TNPSC Group 4: ரூ.76 ஆயிரம் சம்பளம்.! 6,500 பேருக்கு உடனே அரசு வேலை.! விண்ணப்பிப்பது எப்படி? தேர்வு எப்போது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved