- Home
- Tamil Nadu News
- 10ம் வகுப்பு மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்! இந்த கேள்வியை அட்டென்ட் பண்ணினாலே போதும்!
10ம் வகுப்பு மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்! இந்த கேள்வியை அட்டென்ட் பண்ணினாலே போதும்!
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றது. சமூக அறிவியல் தேர்வில் ஒரு மதிப்பெண் கருணை மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Public Exam
SSLC Bonus Mark: Which question will get it? Full details:தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்கி மார்ச் 27ம் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் 83 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 4ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
TN Public Exam
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு
அதேபோல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 4,113 மையங்களில் 12,480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும் 25,888 தனித்தேர்வர்களும், 272 சிறைவாசிகளும் என 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினர்.
இதையும் படிங்க: அரசு தேர்வுகள் இயக்ககத்தில் இருந்து ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு!
Exam paper evaluation work
விடைத்தாள்கள் திருத்தும் பணி
பொதுத்தேர்வு முடிந்ததும் மாணவர்களின் விடைத்தாள்கள் 118 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. நேற்று முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கிய நிலையில் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் பணிகளில் சுமார் 95 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணிவரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10th exam bonus marks
தவறான கேள்வி
இதனிடையே 10ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் ஒரு மதிப்பெண் பிரிவில் நான்காவது கேள்வியில் ஜோதிபா பூலே ஆதரவற்றவர்களுக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான காப்பகங்களையும் திறந்தார். காரணம் ஜோதிபா பூலே குழந்தை திருமணத்தை எதிர்த்தார் விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார் என்று குறிப்பிட்டு மூன்று ஆப்சன்கள் கொடுத்து ஒன்றை தேர்வு செய்யுமாறு கேட்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை! வெளியான முக்கிய அறிவிப்பு! இல்லைனா நடவடிக்கை தான்!
Directorate of Government Examinations
கருணை மதிப்பெண்
இந்த கேள்வியில் இரண்டு வாக்கியங்களுமே முரணாக உள்ளதாக கூறி இதற்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என ஆசிரியர்களும் மாணவர்களும் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சமூக அறிவியல் தேர்வில் ஒரு மதிப்பெண் பிரிவில் நான்காவது கேள்விக்கு பதில் அளித்து இருந்தாலே ஒரு மதிப்பெண் கருணை மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் குஷியில் துள்ளித் குதிக்கின்றனர். வரும் மே 19ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.