MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • IBPS Clerk 2026: அரசு வங்கிகளில் 11,403 கிளார்க் வேலைகள்! தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை முழு விவரம்

IBPS Clerk 2026: அரசு வங்கிகளில் 11,403 கிளார்க் வேலைகள்! தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை முழு விவரம்

IBPS Clerk 2026: இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் (IBPS), 2026-27 ஆட்சேர்ப்பு சுற்றுக்கான வாடிக்கையாளர் சேவை அசோசியேட் (கிளார்க்) பணியிடங்களுக்கான விரிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 11,403 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

1 Min read
Author : Raghupati R
Published : Aug 02 2026, 09:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
11,403 காலியிடங்கள்
Image Credit : ChatGPT

11,403 காலியிடங்கள்

வங்கி வேலைக்கு தயாராகி வரும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக, IBPS தனது CRP CSA-XVI ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் Customer Service Associate (CSA) எனப்படும் கிளார்க் பணியிடங்களுக்கு 11,403 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த ஆட்சேர்ப்பின் மூலம் Bank of Baroda, Canara Bank, Bank of India, Indian Overseas Bank, UCO Bank உள்ளிட்ட பல பொதுத்துறை வங்கிகளில் நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.

கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு அவசியம்.

ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
வயது வரம்பு
Image Credit : AI Gemeni

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களின் வயது 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த தேதி வரம்பிற்குள் இருக்க வேண்டும். SC/ST, OBC, PwBD உள்ளிட்ட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.

முக்கிய தேதிகள்

ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்: ஆகஸ்ட் 1, 2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 21, 2026

முதல்நிலை தேர்வு: அக்டோபர் 2026

முதன்மைத் தேர்வு: டிசம்பர் 2026

தற்காலிக ஒதுக்கீடு: மார்ச் 2027

தேர்வு முறை

ஆட்சேர்ப்பு மூன்று கட்டங்களாக நடைபெறும்:

  • முதற்கட்ட தேர்வு
  • முதன்மை தேர்வு
  • உள்ளூர் மொழி திறன் தேர்வு (LLPT)
33
பட்டதாரிகளுக்கு வங்கி வேலை
Image Credit : Getty

பட்டதாரிகளுக்கு வங்கி வேலை

இந்த ஆண்டு Main Examination-ல் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மொத்த கேள்விகளின் எண்ணிக்கை 155-இல் இருந்து 160 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக Quantitative Aptitude பகுதியில் கூடுதல் கேள்விகள் சேர்க்கப்பட்டுள்ளன. தேர்வு நேரமும் 120 நிமிடங்களில் இருந்து 125 நிமிடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

சம்பளம்

தேர்வு செய்யப்படும் வாடிக்கையாளர் சேவை அசோசியேட் (கிளார்க்) பணியாளர்களுக்கு ₹24,050 முதல் ₹64,480 வரை அடிப்படை ஊதியம் வழங்கப்படும். அதனுடன் DA, HRA மற்றும் பிற அலவன்ஸ்களும் கிடைக்கும்.

விண்ணப்பக் கட்டணம்

  • SC/ST/PwBD/ESM/DESM: ₹175
  • மற்ற விண்ணப்பதாரர்கள்: ₹850

குறிப்பு: விண்ணப்பிக்கும் முன், IBPS வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, தகுதி மற்றும் தேவையான ஆவணங்களை சரிபார்ப்பது அவசியம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வங்கி
வேலைவாய்ப்பு
வேலை வாய்ப்பு
வேலைவாய்ப்பு
தொழில்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: Basic தாறுமாறா உயரப்போகுது.! OPS மாறும் ! AIDEF-ன் 4 அதிரடி கோரிக்கைகள்.!
Recommended image2
8th Pay Commission: Minimum Pay ரூ.69,000.! HRA 40%.! அக்டோபர் 7, 8ல் ஊழியர்களுக்கு முக்கிய தகவல் வெளியாகுமா?
Recommended image3
8th Pay Commission: OPS vs NPS விவகாரம்.! ஊழியர்கள் சொல்வது என்ன?
Related Stories
Recommended image1
Pooja Flowers: சாமிக்கு போட்ட பூஜை பூவை தூக்கி எறியலாமா? தோஷம் வரக்கூடாதுனா இத தெரிஞ்சுக்கோங்க!
Recommended image2
30 Days Without Alcohol: 30 நாள் மது அருந்தாமல் இருந்தால் உடம்புல என்னலாம் மேஜிக் நடக்கும் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved