MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • 30 Days Without Alcohol: 30 நாள் மது அருந்தாமல் இருந்தால் உடம்புல என்னலாம் மேஜிக் நடக்கும் தெரியுமா?

30 Days Without Alcohol: 30 நாள் மது அருந்தாமல் இருந்தால் உடம்புல என்னலாம் மேஜிக் நடக்கும் தெரியுமா?

30 Days Without Alcohol: மது எனப்படும் சரக்கு உடம்புக்கு கெடுதல்னு தெரிஞ்சும் நம்மில் பலரால அதை விட முடியறதில்ல. ஆனா, ஒரே ஒரு மாசம் சரக்கைத் தொடாம இருந்தா, நம்ம உடம்புல என்னென்ன நல்ல மாற்றங்கள் நடக்கும்னு இப்போ பார்க்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Aug 02 2026, 07:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
30 நாட்களில் அற்புதமான மாற்றம்
Image Credit : Getty

30 நாட்களில் அற்புதமான மாற்றம்

வெறும் 30 நாள் சரக்குக்கு லீவு விட்டாலே போதும், உங்க வாழ்க்கையில சூப்பரான மாற்றங்கள் வரும். இந்த சின்ன முயற்சி உங்க கல்லீரல் மேல இருக்கிற அழுத்தத்தைக் குறைக்கும். தூக்கத்தின் தரம் அதிகமாகும், மனநிலையும் ஃப்ரெஷ் ஆகும். 

முதல் வாரத்திலேயே உடம்புல புது எனர்ஜி வந்த மாதிரி இருக்கும், சருமமும் பளபளக்கும். ஒரு மாசத்துல, உடம்புல இருக்குற நச்சுக்கள் வெளியேறி, நீங்க புத்துணர்ச்சியா ஃபீல் பண்ணுவீங்க. நீண்டகால நோய்களைத் தடுக்க இது ஒரு நல்ல தொடக்கம்னு மருத்துவர்களும் சொல்றாங்க.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கல்லீரல், இதய ஆரோக்கியம்: ஆல்கஹால் பிரேக்கால் கிடைக்கும் நன்மைகள்
Image Credit : https://chatgpt.com/

கல்லீரல், இதய ஆரோக்கியம்: ஆல்கஹால் பிரேக்கால் கிடைக்கும் நன்மைகள்

சரக்கடிக்கிறதை ஒரு மாசம் நிறுத்துனா, உங்க கல்லீரல் தன்னைத்தானே சரிசெய்ய ஆரம்பிச்சிடும். ஆல்கஹாலால் கல்லீரலில் சேர்ற கொழுப்பு படிப்படியா குறையும். இதனால ஃபேட்டி லிவர் வர்ற ஆபத்தும் கம்மியாகும். 

30 நாள் சரக்குக்கு பிரேக் விட்டவங்களுக்கு கல்லீரல் என்சைம்கள் சீராகுதுன்னு மருத்துவ ஆய்வுகள் சொல்லுது. இது கல்லீரலுக்கு மட்டும் இல்ல, இதயத்துக்கும் ரொம்ப நல்லது. ரத்த அழுத்தம் நார்மல் ஆகும், இதய நோய்கள் வர்ற அபாயமும் குறையும். இதயம் இன்னும் திறமையா வேலை செய்யும்.

ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்?

Related Articles

Related image1
Pressure Cooker: பிரஷர் குக்கர் பயன்படுத்தும் போது செய்யக்கூடாத 5 தவறுகள்.. மறக்காம நோட் பண்ணுங்க
Related image2
Kitchen Tips: சமையலில் உப்பு அதிகமாயிடுச்சா? சரிசெய்ய 6 சூப்பர் டிப்ஸ் இதோ!
35
தூக்கம், மனநிலை மற்றும் எடை
Image Credit : Getty

தூக்கம், மனநிலை மற்றும் எடை

சரக்கடிச்சா நல்லா தூக்கம் வரும்னு நெனைப்போம், ஆனா அது ஆழ்ந்த தூக்கத்தைக் கெடுத்துடும். சரக்கை நிறுத்துன 30 நாள்ல, உங்க தூக்கத்தின் தரம் சூப்பரா மேம்படும். காலையில ஃப்ரெஷ்ஷா எந்திரிப்பீங்க. மன அழுத்தம், பதட்டம் போன்ற பிரச்சனைகள் குறையும், மனசும் தெளிவா இருக்கும். 

அதுமட்டுமில்லாம, ஆல்கஹால்ல கலோரிகள் அதிகம். அதைத் தவிர்க்கும்போது, எடை குறைய ஆரம்பிக்கும். சராசரியா ஒரு மாசத்துக்கு 1-2 கிலோ வரைக்கும் எடை குறைய வாய்ப்பிருக்கு. உங்க உடம்பும் ஃபிட் ஆகும்.

45
பணத்தை சேமிக்கலாம்
Image Credit : Getty

பணத்தை சேமிக்கலாம்

சரக்கை நிறுத்துறது உடம்புக்கு மட்டும் இல்ல, உங்க பர்ஸுக்கும் ரொம்ப நல்லது. ஆல்கஹால் ஒரு காஸ்ட்லியான பழக்கம். ரெஸ்டாரன்ட், பார்ல குடிக்கிறதுக்கோ, வீட்டுல வாங்கி வெக்கிறதுக்கோ நிறைய பணம் செலவாகும். ஒரு மாசத்துல சரக்குக்காக செய்யுற செலவு ரொம்ப அதிகம். 

உதாரணமா, சராசரியா ஒருத்தர் மாசத்துக்கு ₹5,000-ல இருந்து ₹15,000 வரைக்கும் செலவு பண்றதா ஒரு கணக்கு சொல்லுது. இந்த பணத்தை மிச்சம் பண்ணா, நீங்க வேற செலவுகளுக்குப் பயன்படுத்தலாம், சேமிக்கலாம். இந்த காசு உங்க பாக்கெட்லயே இருக்கும், உங்க நிதிப் பாதுகாப்பையும் அதிகப்படுத்தும்.

55
நீண்ட கால நன்மைகள்
Image Credit : Gemini AI

நீண்ட கால நன்மைகள்

ஒரு மாசம் சரக்குக்கு பிரேக் விடுறது தற்காலிகமான மாற்றம் இல்ல. இது உங்க லைஃப்ஸ்டைல்ல நீண்டகால நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும். இந்த 30 நாள், ஆல்கஹாலுக்கும் உங்களுக்குமான உறவை மறுபரிசீலனை செய்ய ஒரு வாய்ப்பு கொடுக்கும். இந்த பிரேக்குக்கு அப்புறம் நிறைய பேர் அவங்க குடிப் பழக்கத்தை மாத்திக்கிறாங்க, இல்லைனா மொத்தமா நிறுத்திடுறாங்கன்னு மருத்துவர்கள் சொல்றாங்க. 

உங்க உடம்பு, மனசு மேல உங்களுக்கு ஒரு கண்ட்ரோல் கிடைக்கும். இது ஆரோக்கியம், பண லாபத்தை நிலையா வெச்சுக்க ஒரு வலுவான அடித்தளம் போடும். அப்புறம் என்ன யோசனை? சரக்கு பழக்கம் இருந்தா, உடனே இந்த 30 நாள் சேலஞ்சை ஏத்துக்கிட்டு, ஆல்கஹாலுக்கு டாடா சொல்லுங்க.

வீடு துடைக்கும்போது இந்த 3 பொருளை தண்ணில கலந்து பாருங்க... தரை கண்ணாடி மாதிரி பளபளக்கும்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cleaning Hacks: தண்ணீர் பைப் உப்புக்கறை போகணுமா? 'இந்த' ஒரு பொருள் போதும்.. அசத்தல் கிளீனிங் டிப்ஸ்!
Recommended image2
How Ants Find Food: எறும்புகளின் ‘நேச்சுரல் GPS’ ரகசியம்! சர்க்கரையை கண்டுபிடிக்கும் சூப்பர் திறன்!
Recommended image3
Gas Burner Cleaning: "கேஸ் அடுப்பில் தீ மிகவும் குறைவாக வருகிறதா? புதிய அடுப்பு வாங்கா வேண்டாம்...
Related Stories
Recommended image1
Pressure Cooker: பிரஷர் குக்கர் பயன்படுத்தும் போது செய்யக்கூடாத 5 தவறுகள்.. மறக்காம நோட் பண்ணுங்க
Recommended image2
Kitchen Tips: சமையலில் உப்பு அதிகமாயிடுச்சா? சரிசெய்ய 6 சூப்பர் டிப்ஸ் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved