MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • ஒரு கப் ஐஸ்கிரீம் விலை ரூ.5.2 லட்சமா? கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம் – அப்படி என்ன ஸ்பெஷல்?

ஒரு கப் ஐஸ்கிரீம் விலை ரூ.5.2 லட்சமா? கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம் – அப்படி என்ன ஸ்பெஷல்?

உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம் என்ற பெருமையுடன் ஜப்பானைச் சேர்ந்த ஆடம்பர ஐஸ்கிரீம் பிராண்டான ‘செல்லாடோ’ (Cellato) அதிகாரப்பூர்வமாக கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளது.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Oct 25 2026, 08:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஒரு கப் ஐஸ்கிரீம் விலை ரூ.5.2 லட்சமா? அப்படி என்ன ஸ்பெஷல்?
Image Credit : x

ஒரு கப் ஐஸ்கிரீம் விலை ரூ.5.2 லட்சமா? அப்படி என்ன ஸ்பெஷல்?

விதவிதமான சுவைகளிலும், நாவில் கரையும் மிருதுவான தன்மையிலும் ஐஸ்கிரீமை ருசித்துச் சாப்பிடுவதில் பலருக்கு அலாதி பிரியம் உண்டு. ஆனால், எவ்வளவுதான் ஐஸ்கிரீம் பிரியராக இருந்தாலும், ஒரேயொரு கப் ஐஸ்கிரீமிற்கு ரூ.5.2 லட்சம் கொடுக்க நீங்கள் தயாரா? நம்புவதற்குக் கடினமாக இருந்தாலும் இது முற்றிலும் உண்மை. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்துள்ள உலகின் மிக விலை உயர்ந்த ஐஸ்கிரீமின் விலை 8,73,400 ஜப்பானிய யென் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5.2 லட்சம் முதல் ரூ.5.5 லட்சம் வரை) ஆகும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம்
Image Credit : x

கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம்

ஜப்பானைச் சேர்ந்த 'செல்லாடோ' (Cellato) என்ற ஆடம்பர ஐஸ்கிரீம் பிராண்ட் இந்த பிரத்யேக டெசர்ட்டை உருவாக்கியுள்ளது. உலக சாதனை படைக்கும் நோக்கத்துடன் மிகவும் அரிய, விலைமதிப்பற்ற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஐஸ்கிரீம், உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீமாக 'கின்னஸ் உலக சாதனையில்' (Guinness World Records) அதிகாரப்பூர்வமாகப் பதிவாகியுள்ளது.

34
ஒரு கப் ஐஸ்கிரீம் இவ்வளவு விலையா? பின்னணி என்ன?
Image Credit : x

ஒரு கப் ஐஸ்கிரீம் இவ்வளவு விலையா? பின்னணி என்ன?

ஐஸ்கிரீம் இவ்வளவு விலை உயர்ந்ததாக இருப்பதற்கு அதில் பயன்படுத்தப்பட்டுள்ள அபூர்வப் பொருட்களும் அதன் கைவினைத்திறனுமே காரணம். இத்தாலியின் ஆல்பா (Alba) நகரில் விளைவிக்கப்படும் உலகின் அரிய வகையான வெள்ளை ட்ரஃபிள் காளான்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் 1 கிலோ விலை மட்டுமே சுமார் 20 லட்சம் ஜப்பானிய யென் (இந்திய மதிப்பில் பல லட்சங்கள்) ஆகும். இத்தாலிய பார்மிஜியானோ ரெஜியானோ சீஸ் (Parmigiano Reggiano) மற்றும் ஜப்பானிய பாரம்பரிய பானத்தின் தயாரிப்பு எச்சமான சாகே லீஸ் (Sake Lees) இதில் கலக்கப்பட்டுள்ளன. இந்த ஐஸ்கிரீமின் மேல் அலங்காரத்திற்காகத் தூய உண்ணக்கூடிய தங்க இழை மெல்லியதாகத் தூவப்படுகிறது.

ஒசாகாவில் உள்ள புகழ்பெற்ற 'ரிவி' (RiVi) உணவகத்தின் தலைமைக் கலைஞர் ததயோஷி யமடாவுடன் இணைந்து இந்த ரெசிபி உருவாக்கப்பட்டது. சுவையை துல்லியமாகக் கொண்டுவர ஒன்றரை ஆண்டுகள் கடும் சோதனைகளும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. கின்னஸ் உலக சாதனை விருது கிடைத்தது எங்களது 1.5 ஆண்டுகால கடுமையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்று செல்லாடோ நிறுவனப் பிரதிநிதி தெரிவித்துள்ளார். இந்த ஐஸ்கிரீமை உண்பதற்காக, கியோட்டோவின் புஷிமி பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய கைவினைஞர்கள் கோவில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களைக் கட்டும் பண்டைய நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரித்த தனிப்பயன் உலோக ஸ்பூன் இதனுடன் வழங்கப்படுகிறது.

44
ஒரு கப் ஐஸ்கிரீம் விலை ரூ.5.2 லட்சமா? அதிர்ச்சியில் நெட்டிசன்கள்
Image Credit : x

ஒரு கப் ஐஸ்கிரீம் விலை ரூ.5.2 லட்சமா? அதிர்ச்சியில் நெட்டிசன்கள்

இந்த ஐஸ்கிரீம் குறித்த தகவல் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே 27,000-க்கும் மேற்பட்ட லைக்குகளைக் குவித்து வைரலாகி வருகிறது. விலையைக் கேட்டு ஆடிப்போன இணையவாசிகள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

ஒரு பயனர், இந்த ஐஸ்கிரீமிற்குள் என்னதான் இருக்கிறது என்றே புரியவில்லை என்று ஆச்சரியத்துடன் பதிவிட்டு உள்ளார். மற்றொருவர், இனிமேல் மெக்டொனால்ட்ஸ் மெக்ஃப்ளர்ரி (McFlurry) ஐஸ்கிரீம் விலை அதிகம்னு நான் சொல்லவே மாட்டேன் என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார். கடவுளே, இவ்வளவு விலையா என்று பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
மத்தி, நெத்திலி மீன்களில் இவ்வளவு சத்துகளா? குறைந்த விலையில் உடலை வலுவாக்கும் சிறு மீன்கள்!
Recommended image2
Bombay Halwa Recipe: பிகினர்ஸ் கூட ஈஸியா செய்யலாம்… ஸ்வீட் ஸ்டால் ஸ்டைலில் பாம்பே அல்வா ரெசிபி..!
Recommended image3
Chef Dhamu’s All-Time Favorite Food: சீரக சம்பா பிரியாணி! இப்படி செஞ்சு பாருங்க… டேஸ்ட் அள்ளும்
Related Stories
Recommended image1
Chef Dhamu’s All-Time Favorite Food: சீரக சம்பா பிரியாணி! இப்படி செஞ்சு பாருங்க… டேஸ்ட் அள்ளும்
Recommended image2
மத்தி, நெத்திலி மீன்களில் இவ்வளவு சத்துகளா? குறைந்த விலையில் உடலை வலுவாக்கும் சிறு மீன்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved