- Home
- Career
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பி.எச்.டி நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு! நேரடி லிங்க் இதோ...
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பி.எச்.டி நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு! நேரடி லிங்க் இதோ...
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (எம்எஸ்யூ), ஜனவரி 2025 பருவத்திற்கான பி.எச்.டி தகுதி நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டுள்ளது. தேர்வு தேதிகள், செயல்முறை மற்றும் நேரடி பதிவிறக்க இணைப்பு உள்ளிட்ட அனைத்து முக்கிய விவரங்களையும் இங்கே பெறுங்கள்.

Phd
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (MSU), 2025 ஜனவரி பருவத்திற்கான முனைவர் பட்ட (பி.எச்.டி) சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தற்போது வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைவரும் தங்களது ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முன்னதாக, பி.எச்.டி படிப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்த MSU, தற்போது நுழைவுத் தேர்வுக்கான முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம், ஆர்வமுள்ளவர்கள் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் முனைவர் பட்டம் பெறும் வாய்ப்பைப் பெறலாம்.
phd
முக்கியத் தகவல்கள்
பி.எச்.டி. சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு கட்டாயமாகும். JRF, UGC-NET, SET போன்ற தகுதி உடையவர்களுக்கு நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு உண்டு. இருப்பினும், அவர்கள் நேர்முகத் தேர்வு / கலந்தாய்வுக்குப் பதிவு செய்ய வேண்டும்.இந்தத் தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை (ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில்) நடத்தப்படுகிறது.
நுழைவுத் தேர்வுக்கான தகுதி இந்த ஆண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும். நுழைவுத் தேர்வு கட்டணம் ரூ.2,000 மற்றும் நேர்முகத் தேர்வு / கலந்தாய்வு கட்டணம் ரூ.3,000 ஆகும். தேர்வு முடிவுகளைப் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பி.எச்.டி. ஆன்லைன் பதிவுக்கு முதுகலை பட்டப்படிப்பு இறுதி மதிப்பெண் பட்டியல் மற்றும் சாதி சான்றிதழ் கட்டாயம். பாரத ரத்னா டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் நூற்றாண்டு ஆராய்ச்சி உதவித்தொகை தகுதியான மாணவர்களுக்கு வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை எப்படி இருக்கும்?
ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வு முதுகலை பட்டப்படிப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் கொள்குறி வகையில் 70 மதிப்பெண்களுக்கு 2 மணி நேரம் நடைபெறும். நுழைவுத் தேர்வு மதிப்பெண் (70%) மற்றும் முதுகலை மதிப்பெண் (30%) ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு கொள்கையின்படி மாணவர் சேர்க்கை நடைபெறும்.
முக்கிய தேதிகள்:
ஆன்லைன் விண்ணப்பப் பதிவு முடிந்த நாள்: 20.04.2025
நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள்: 27.04.2025
ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும் நாள்: 24.04.2025 முதல்
எனவே, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி படிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் உடனடியாக பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிட்டு தங்களது ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். உங்கள் ஆராய்ச்சிப் பயணத்திற்கான முதல் படி இதுவே!
ஹால் டிக்கெட் பதிவிறக்க இணைப்பு: https://msuniv.com/jan25_phd_entrance/phd-qualifying-entrance-hallticket
இதையும் படிங்க: பி.எச்.டி படிக்க ஆசையா? மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் வாய்ப்பு!