- Home
- Tamil Nadu News
- கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம்.! எந்த ஊரில் தெரியுமா.? முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம்.! எந்த ஊரில் தெரியுமா.? முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின், முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்ட கலைஞருக்கு இது ஒரு சிறந்த அங்கீகாரம்.

Kalaignar University : தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நம்முடைய உறுப்பினர்கள் கு. செல்வப்பெருந்தகை, ஜி.கே. மணி, சிந்தனைச் செல்வன், வீ.பி. நாகைமாலி இராமச்சந்திரன், டாக்டர் சதன் திருமலைக்குமார், எம்.எச். ஜவாஹிருல்லா, ரா. ஈஸ்வரன், தி. வேல்முருகன் ஆகியோர்
விதி எண் 55-ஐப் பயன்படுத்தி நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுடைய பெயரால் ஓர் பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டுமென்று தங்களுடைய கருத்துக்களை உணர்வுபூர்வமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பள்ளிகளாக இருந்தாலும், கல்லூரிகளாக இருந்தாலும்,
கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம்
அவையெல்லாம் இன்றைக்கு வளர்ந்து, மேலோங்கி மற்ற மாநிலங்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக, ஏன், உலக அளவிலே இன்றைக்குப் பாராட்டப்படக் கூடிய அளவிற்கு வளர்ந்திருக்கின்றன. நாட்டிலேயே முதல் இடத்திற்கு வந்திருக்கக்கூடிய அந்தக் கல்வி நிலையங்கள் எல்லாம் உருவாவதற்குக் காரணமாகப் பல்வேறு தலைவர்கள் இருந்தாலும், அவர்களிலே முக்கியமான தலைவர்களில் ஒருவராக நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார்.
Kalaignar University
கும்பகோணத்தில் பல்கலைக்கழகம்
அப்படி கல்வியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டிருக்கக்கூடிய, பல்வேறு திட்டங்களை உருவாக்கித் தந்திருக்கக்கூடிய நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுக்கு எல்லோரும் இங்கே குறிப்பிட்டிருப்பதைப்போல, பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு விரைவில் அவர் பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருக்கக்கூடிய கும்பகோணத்திலே நம்முடைய உறுப்பினர் ஜி.கே. மணி அவர்கள் குறிப்பிட்டதைப்போன்று, எந்தவிதத் தயக்கமுமின்றி நான் அறிவிக்கிறேன்.
Kalaignar University Kumbakonam
விரைவில் பல்கலைக்கழகம்
தலைவர் கலைஞர் அவர்களது பெயரில் கும்பகோணத்தில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்ற உறுதியான செய்தியை மீண்டும் சொல்கிறேன்; எந்தவித தயக்கமுமின்றி இதைச் சொல்கிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்