பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த 28 பேருக்கு நீதி கிடைக்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். குற்றவாளிகள் தப்பிக்க விடப்பட மாட்டார்கள் என்றும், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களைத் துரத்திப் பிடித்து தண்டிப்போம் என்றும் அவர் கூறினார்.

பஹல்காம் தாக்குதலைப் பிறகு வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி பயங்கரவாதிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். 28 உயிர்களைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் அடையாளம் கண்டு தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதி அளித்துள்ளார்.

தாக்குதலுக்குப் பிறகு தனது முதல் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, தாக்குதல் நடத்திய குற்றவாளிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

பஹல்காம் தாக்குதலை பாகிஸ்தான் தூதரகம் கேக் வெட்டி கொண்டாடியதா?

Scroll to load tweet…

கற்பனைகூட செய்ய முடியாத தண்டனை:

"ஏப்ரல் 22 அன்று, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நாட்டின் அப்பாவி மக்களைக் கொன்றனர்... இந்த சம்பவத்திற்குப் பிறகு நாடு சோகமாகவும் வேதனையாகவும் உள்ளது. நாங்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் நிற்கிறோம். பயங்கரவாதிகள் தப்பவிடப்பட மாட்டார்கள், அவர்கள் மீது வலுவான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பிரதமர் மோடி கூறினார்.

"தண்டனை குறிப்பிடத்தக்கதாகவும் கடுமையானதாகவும் இருக்கும். பயங்கரவாதிகள் கற்பனைகூட செய்து பார்க்காத தண்டனை அவர்களுக்குக் கிடைக்கும்" என்று அவர் மேலும் கூறினார். தொடர்ந்து பேசிய மோடி, இந்தியாவின் மன உறுதி பயங்கரவாதத்தால் ஒருபோதும் தகர்க்கப்படாது என்றும், நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

பஹல்காமில் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடிய நிஜ ஹீரோ!

உலகில் எந்த மூலையில் இருந்தாலும்...

இந்தியில் பேசிக்கொண்டிருந்த பிரதமர் மோடி சட்டென்று ஆங்கிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். "இன்று, பீகார் மண்ணில், நான் முழு உலகிற்கும் இதனை அறிவிக்கிறேன். இந்தியா ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களின் ஆதரவாளர்களையும் அடையாளம் கண்டு, கண்டுபிடித்து தண்டிக்கும். பூமியின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களைத் துரத்திப் பிடிப்போம். இந்தியாவின் மன உறுதி பயங்கரவாதத்தால் ஒருபோதும் உடைக்கப்படாது," என்று பிரதமர் கூறினார்.

"பயங்கரவாதம் ஒருபோது தண்டிக்கப்படாமல் போகாது. நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இந்த உறுதிப்பாட்டில் முழு தேசமும் ஒன்றுபட்டு நிற்கிறது. மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் நம்முடன் உள்ளனர். இந்தியாவுக்கு ஆதரவாக நிற்கும் பல்வேறு நாடுகளின் மக்களுக்கும், தலைவர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்," என்று பிரதமர் மோடி கூறினார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதில் குறிப்பாக, பாகிஸ்தானின் உயர்மட்ட தூதர் சாத் அகமது வாராய்ச்சை வரவழைத்து, அதன் ராணுவ அதிகாரிகள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

படிப்பதை எல்லாம் நினைவில் வைத்துக்கொள்வது எப்படி?