- Home
- Sports
- RCB v RR: ஹேசில்வுட் மேஜிக் பவுலிங்! அப்பாடா! ஒரு வழியாக பெங்களூருவில் வெற்றி பெற்ற ஆர்சிபி!
RCB v RR: ஹேசில்வுட் மேஜிக் பவுலிங்! அப்பாடா! ஒரு வழியாக பெங்களூருவில் வெற்றி பெற்ற ஆர்சிபி!
ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜோஸ் ஹேசில்வுட் மேஜிக் பவுலிங் செய்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

IPL: RCB beat Rajasthan Royals: ஐபிஎல்லில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ராஜஸ்தானுக்கு எதிரான நடந்த போட்டியில் ஆர்சிபி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 5 விக்கெட் இழந்து 2025 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 42 பந்தில் 8 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 70 ரன்கள் எடுத்தார். தேவ்தத் படிக்கல் 27 பந்தில் 4 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 50 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் சந்தீப் சர்மா 2 விக்கெட் வீழ்த்தினார்.
IPL , RCB vs RR
பின்பு இமாலய இலக்கை நோக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்கத்தில் அதிரடியாக ஆடியது. தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 பந்தில் 7 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 49 ரன்கள் அடித்து ஹேசில்வுட் பந்தில் கேட்ச் ஆனார். ஆனால் 14 வயது சிறுவன் வைபவ் சூர்யவம்சி 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். நிதிஷ் ராணா (28 ரன்), ரியான் பராக் (22 ரன்) ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.
IPL 2025, Cricket
இதன்பிற்கு வந்த ஹெட்மயர் 11 ரன்னில் ஹேசில்வுட் வேகத்தில் வீழ்ந்தார். பின்பு ஜோடி சேர்ந்த துருவ் ஜூரல், ஷிவம் துபே அதிரடியாக விளையாடினார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றிக்கு 3 ஓவர்களில் 18 ரன்கள் தேவைப்பட்டது. புவனேஷ்வர் குமார் வீசிய 18வது ஓவரில் துருவ் ஜூரல் 2 பவுண்டரி 1 சிக்சர், ஷிவம் துபே 1 சிக்சர் விளாசியதால் அந்த ஓவரில் 22 ரன்கள் வந்தது. கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது.
RCB WON, IPL
19வது ஓவரை வீசிய ஜோஸ் ஹேசில்வுட் துருவ் ஜூரல் (34 பந்தில் 47 ரன்), ஜோப்ரா ஆர்ச்சர் (0) ஆகியோரை அவுட்டாகி வெறும் 2 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இது தான் ஆட்டத்தின் திருப்பு முனையாகும். கடைசி ஓவரில் ஆர்சிபி வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. யஷ் தயாள் வீசிய அந்த ஓவரில் ராஜஸ்தான் 2 விக்கெட் இழந்து 4 ரன்கள் மட்டுமே எடுத்தது. 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் இழந்து 194 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Jose Hazlewood, RCB
4 ஓவர்களில் 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய ஜோஸ் ஹேசில்வுட் ஆட்டநாயகன் விருது வென்றார். 9வது ஆட்டத்தில் விளையாடியுள்ள ஆர்சிபிக்கு இது 6வது வெற்றியாகும். அந்த அணி 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகள் எடுத்து 3 இடத்தில் உள்ளது. ஆர்சிபி தோல்வி அடைந்த அந்த 3 போட்டிகளும் பெங்களுரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து தான். அதனால் இன்றைய போட்டியிலும் பெங்களூருவில் ஆர்சிபி தோற்று விடும் என பலரும் நினைத்த நிலையில், அவர்களின் கணிப்பை பொய்யாக்கி இந்த சீசனில் பெங்களூருவில் முதல் வெற்றியை ஆர்சிபி பதிவு செய்துள்ளது.