MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு.. ஒவ்வொரு வீரருக்கும் எவ்வளவு கிடைக்கும்?

இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு.. ஒவ்வொரு வீரருக்கும் எவ்வளவு கிடைக்கும்?

T20 World Cup 2026: இந்திய அணி 3வது முறையாக டி20 உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. மேலும் சொந்த மண்ணில் கோப்பையை வென்ற முதல் நாடும் இந்தியா தான்.

2 Min read
Author : Rayar A
Published : Mar 10 2026, 10:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
T20 உலகக்கோப்பை 2026 வென்ற இந்தியா
Image Credit : Getty

T20 உலகக்கோப்பை 2026 வென்ற இந்தியா

T20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றதை அடுத்து இந்திய அணி வீரர்களுக்கும் சப்போர்ட் ஸ்டாஃப்களுக்கும் 131 கோடி ரூபாய் பரிசுத்தொகையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. இதுவே இந்திய அணிக்கு வழங்கப்படும் மிகப்பெரிய பரிசுத்தொகை என BCCI துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பாராட்டியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இந்திய அணிக்கு 131 கோடி ரூபாய் பரிசுத்தொகை
Image Credit : Getty

இந்திய அணிக்கு 131 கோடி ரூபாய் பரிசுத்தொகை

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், ''T20 உலகக்கோப்பை 2026 தொடரில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற இந்திய அணிக்கு 131 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்படுகிறது. 

இந்த சாதனைக்காக வீரர்கள், சப்போர்ட் ஸ்டாஃப் மற்றும் தேர்வாளர்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவர்கள் எதிர்காலத்திலும் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அணியில் இடம்பெற்ற 15 வீரர்களுக்கும் தலா சுமார் ₹5.24 கோடி வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

Related Articles

Related image1
டி20 உலகக்கோப்பை 2026.. ஐசிசி கனவு அணியில் 4 இந்திய வீரர்களுக்கு இடம்.. அட! கேப்டன் இவரா?
Related image2
சிலிண்டர் தட்டுப்பாடு.. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்.. ஐபிஎல் போட்டிகள் நடக்குமா?
34
இறுதிப்போட்டியில் என்ன நடந்தது?
Image Credit : Getty

இறுதிப்போட்டியில் என்ன நடந்தது?

முன்னதாக, டி20 உலகக்கோப்பை 2026 இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 255 ரன்கள் குவித்தது. 

சஞ்சு சாம்சன் வெறும் 46 பந்துகளில் 8 சிக்சர்கள், 5 பவுண்டரியுடன் 89 ரன்கள் விளாசி அசத்தினார். அபிஷேக் சர்மா 21 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 52 ரன்கள் அடித்தார். இஷான் கிஷன் 25 பந்துகளில் 4 பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்களுடன் 54 ரன்கள் எடுத்தார். ஷிவம் துபே வெறும் 8 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 26 ரன்கள் அடித்தார்.

44
பல சாதனைகளை படைத்த இந்திய அணி
Image Credit : Getty

பல சாதனைகளை படைத்த இந்திய அணி

பின்பு இமாலய இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி ரன்களுக்கு 19 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 96 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவரில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். அக்சர் படேல் சிறப்பாக பந்துவீசி 3 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். 

இதன் மூலம் இந்திய அணி 3வது முறையாக டி20 உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. மேலும் சொந்த மண்ணில் கோப்பையை வென்ற முதல் நாடும் இந்தியா தான். தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்ற முதல் நாடும் இந்தியா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு
Latest Videos
Recommended Stories
Recommended image1
இலங்கை தொடரில் இது நடக்கலைனா??? இந்திய வீரர்களுக்கு கம்பீர் வார்னிங்.. பரபரப்பு தகவல்!
Recommended image2
TNPL: டிஎன்பிஎல் திரில்லர்: கடைசி வரை போராடிய திருச்சி... வெற்றியை தட்டிச்சென்ற மதுரை!
Recommended image3
Ishan Kishan RBI Job: பேங்க் ஆபீஸரான இஷான் கிஷன்! மாச சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Related Stories
Recommended image1
டி20 உலகக்கோப்பை 2026.. ஐசிசி கனவு அணியில் 4 இந்திய வீரர்களுக்கு இடம்.. அட! கேப்டன் இவரா?
Recommended image2
சிலிண்டர் தட்டுப்பாடு.. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்.. ஐபிஎல் போட்டிகள் நடக்குமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved