TNSET Result 2025: டிஎன்செட் தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது? டி.ஆர்.பி-யிடம் கேள்வி
தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வு (TNSET) 2025-க்கான முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற கேள்விக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்குத் தகுதி வாய்ந்த நபர்களைத் தேர்ந்தெடுக்கும் தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வு (TNSET) 2025-ன் முடிவுகள் எப்போதுப் வெளியாகும் என்ற ஏதிர்பார்பில் தேர்வர்கள் உள்ளனர்.
Exam paper
இந்தத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 6 முதல் 9 ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது. தற்போதுள்ள தகவல்களின்படி, தேர்வு முடிவுகள், வெட்டு மதிப்பெண்கள் மற்றும் தமிழ்நாடு செட் மதிப்பெண் அட்டை 2025 ஆகியவை ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களை வடிகட்டுவதற்காக இந்தத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. உதவி பேராசிரியர் பணியிடத்தைப் பெற நீங்கள் டிஎன்செட் 2025 கட் ஆப் மதிப்பெண்களுக்கு மேல் பெறுவது அவசியம்.
public exam
டிஎன் செட் தேர்வு 2025, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் 43 பாடங்களுக்கு ஆன்லைன், கணினி அடிப்படையிலான தேர்வாக மார்ச் 2025 இல் நடத்தப்பட்டது. டிஎன்செட் தேர்வு முடிவு 2025 அதிகாரப்பூர்வமாக PDF வடிவில் இணையதளத்தில் வெளியிடப்படும். இதில் விண்ணப்பதாரரின் பாடவாரியான மதிப்பெண்கள், பதிவு எண், மொத்த மதிப்பெண்கள் மற்றும் தகுதி நிலை ஆகியவை இடம்பெறும். பொது மற்றும் ஓபிசி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 40% ஆகும். எஸ்சி, எஸ்டி மற்றும் பிடபிள்யூடி விண்ணப்பதாரர்களுக்கு இது 35% ஆகும். தங்கள் முடிவுகளை அறிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் TRB-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பங்கள் இணைப்பைக் கிளிக் செய்து முடிவுகளை அணுகலாம்.
டிஎன்செட் தேர்வு முடிவு எப்போது? டி.ஆர்.பி சொல்வதென்ன
ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரப்பூர்வ தொலைப்பேசி எண்ணில் "தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வு (TNSET) 2025-க்கான முடிவுகள் எப்போது வெளியிடப்படும்" என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு டி.ஆர்.பி தரப்பில் " டி.என்.செட் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான பணி வேகமாக நடைப்பெற்று வருகிறது" என்றனர்.
இதுகுறித்து சில பெயர் வெளியிட விரும்பாத அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, "மே முதல் வாரம் அல்லது 2-ம் வாரத்தில் இந்த முடிவுகள் வெளியாக வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்தனர். இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
டிஎன் மாநில தகுதித் தேர்வு முடிவு 2025 ஏப்ரல் மாதத்தில் TN TRB-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன், தேர்வெழுதிய அனைவரும் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று தங்கள் முடிவுகளை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். டிஎன்செட் தேர்வு முடிவுகள் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அதாவது, விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்குள் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்; அவர்கள் தங்கள் சான்றிதழை புதுப்பிக்க வேண்டியதில்லை. 2025 டிஎன்செட் மதிப்பெண் அட்டையில் விண்ணப்பதாரரின் தனிப்பட்ட விவரங்களான பதிவு எண், பிறந்த தேதி மற்றும் மார்ச் 2025 இல் நடைபெற்ற தாள் 1 மற்றும் தாள் 2க்கான பாடவாரியான மதிப்பெண்கள் இடம்பெறும். விண்ணப்பதாரர்களின் தகுதி நிலை மற்றும் அவர்கள் பொருந்தக்கூடிய பிரிவு ஆகியவையும் முடிவுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
trb.tn.gov.in இல் டிஎன்செட் தேர்வு முடிவு 2025 ஐ எப்படி சரிபார்க்கலாம்?
trb.tn.gov.in இல் டிஎன்செட் தேர்வு முடிவு 2025 ஐ கீழ்கண்ட எளிய வழிமுறைகளைப் பயன்படுத்தி நீங்கள் சரிபார்க்கலாம்.
1. நீங்கள் டிஎன் செட் 2025 தேர்வில் பங்கேற்றிருந்தால், முடிவுகள் வெளியானவுடன் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
2. இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில், டிஎன்செட் 2025 முடிவுகள் இணைப்பைத் தேடவும். அதைக் கிளிக் செய்தவுடன், விண்ணப்பதாரர்கள் புதிய பக்கத்திற்கு திருப்பி விடப்படுவார்கள்.
3. உங்கள் உள்நுழைவு விவரங்களை உள்ளிட்டு, உங்கள் முடிவுகளை PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்யவும்.
4. 2025 டிஎன்செட் முடிவுகளில், விண்ணப்பதாரரின் ஒட்டுமொத்த பாடவாரியான மதிப்பெண்கள், தேர்ச்சி வெட்டு மதிப்பெண்கள் மற்றும் அவர்களின் பிரிவுகளின்படி தகுதி நிலை ஆகியவை இடம்பெற்றிருக்கும்.
தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வு (TNSET) 2025-க்கான முடிவுகள் விரைவில் வெளியாகவுள்ளன! இந்தத் தேர்வை எழுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது முடிவுகளைக் காண ஆவலுடன் காத்திருக்கலாம். உங்களது மதிப்பெண்களை அறிந்துகொள்ளத் தயாராக இருங்கள். முக்கியமான எந்தத் தகவலையும் தவறவிடாமல் இருக்க, அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்ந்து கண்காணித்து வாருங்கள்!