எல்லையில் இந்திய ராணுவ வீரரை பிடித்துச் சென்ற பாகிஸ்தான்! அதிகரிக்கும் பதற்றம்!
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ வீரரை பாகிஸ்தான் ராணுவம் பிடித்துச் சென்றது. இடுஹ் தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

Pakistani army captures Indian soldier: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்கி வருவதால் அந்நாட்டினருக்கு விசா வழங்குவதை இந்தியா முற்றிலுமாக நிறுத்தி வைத்துள்ளது. பாகிஸ்தானுடன் ஏற்படுத்தப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது.
Indian Army
இதற்கு பாகிஸ்தானும் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர முக முக்கியமாக சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது. இந்தியர்களுக்கு விசா வழங்குவதையும் பாகிஸ்தான் முழுமையாக நிறுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றம் உருவாகி உள்ளது. இந்தியாவுடன் போருக்கு தயாராகி உள்ள பாகிஸ்தான் எல்லையில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் சர்வதேச எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் இந்திய ராணுவத்தினரும் குவிந்துள்ளனர். இந்த பதற்றத்துக்கு இடையே பாகிஸ்தான் எல்லைக்கு தவறுதலாக சென்ற இந்திய ராணுவ வீரர் ஒருவரை பாகிஸ்தான் ராணுவம் பிடித்துச் சென்றுள்ளது.
சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன? இதை பாகிஸ்தான் ரத்து செய்ததால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
Jammu and Kashmir border
இந்திய ராணுவத்தின் 182வது பட்டாலியனைச் சேர்ந்த கான்ஸ்டபிள் பி.கே. சிங் என்ற வீரர், இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள விவசாய நிலத்திற்கு அருகில் பணியில் இருந்தபோது, தற்செயலாக இந்திய எல்லை வேலியைக் கடந்து பாகிஸ்தான் பகுதிக்குள் சென்றார். பின்னர் அவர் பாகிஸ்தான் ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்டார். அவரிடம் துப்பாக்கி, வாக்கி டாக்கி உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் செக்டாரில் உள்ள சர்வதேச எல்லையைத் தற்செயலாகக் கடந்ததால், பிஎஸ்எஃப் (எல்லைப் பாதுகாப்புப் படை) வீரர் ஏப்ரல் 23 (இன்று) பிற்பகல் பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதாக செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது.
India-Pakistan
இந்த சம்பவத்திற்குப் பிறகு, இரு தரப்பு அதிகாரிகளும் நிலைமை குறித்து விவாதிக்கவும் இந்திய ராணுவ வீரரை விடுவிப்பதற்கான பணிகளை மேற்கொள்ளவும் கொடிக் கூட்டத்தை நடத்தினர். பாகிஸ்தான் ராணுவத்தினரால் பிடித்து செல்லப்பட்ட இந்திய ராணுவ வீரரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீரரை உடனடியாக விடுக்கும்படி இந்திய ராணுவம் வைத்த கோரிக்கையை பாகிஸ்தான் ராணுவம் நிராகரித்துள்ளது. இந்திய ராணுவ வீரரை விடுவிக்க இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்று அதிகாலை, உதம்பூரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் ஒரு இந்திய ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
நடுக்கடலில் ஏவுகணை சோதனை நடத்திய இந்திய கடற்படை! பயந்து நடுங்கிய பாகிஸ்தான்!