MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் இணைந்த புஷ்பா 2 வில்லன்

ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் இணைந்த புஷ்பா 2 வில்லன்

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் லேட்டஸ்டாக புஷ்பா 2 வில்லன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 24 2025, 03:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Pushpa 2 Villain Joins in Jailer 2 Movie : தமிழ் சினிமாவில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் டைகர் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் உலகளவில் 650 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Jailer 2

Jailer 2

விறுவிறுவென தயாராகும் ஜெயிலர் 2

இந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகையன்று, ஒரு புரோமோ வீடியோவுடன் ஜெயிலர் இரண்டாம் பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ரஜினிகாந்த், நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோர் இந்த புரோமோவில் இடம்பெற்றிருந்தனர். தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஓப்பனிங் வசூல் செய்ய வாய்ப்புள்ள படங்களில் ஜெயிலர் 2-வும் ஒன்று. அனிருத் ரவிச்சந்தர் தான் இரண்டாம் பாகத்திற்கும் இசையமைக்கிறார். முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் அதிரடி காட்சிகள் நிறைந்திருக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Jailer 2: ஜெயிலர் 2 படத்தில் இவரா? பயங்கரமான ஆளாச்சே - வெளியான வேற லெவல் அப்டேட்!

34
Jailer 2 Update

Jailer 2 Update

கேரளாவில் ஜெயிலர் 2 ஷூட்டிங்

ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதமே தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்திய படக்குழு, இரண்டாம் கட்ட படப்பிடிப்பை கேரளாவில் நடத்தி வருகிறது. இதில் ரஜினிகாந்த், ரம்யாகிருஷ்ணன், மிர்ணா ஆகியோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ஜெயிலர் முதல் பாகத்தில் கேமியோ ரோலில் நடித்த மோகன்லால், ஷிவராஜ்குமார் ஆகியோர் ஜெயிலர் 2விலும் நடிப்பார்கள் என கூறப்படுகிறது.

44
Fahadh Faasil, Rajinikanth

Fahadh Faasil, Rajinikanth

ஜெயிலர் 2வில் இணைந்த பகத் பாசில்

இந்நிலையில், ஜெயிலர் 2 படத்தில் மற்றுமொரு மாஸ் நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மலையாள நடிகர் பகத் பாசிலும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் இதற்கு முன்னர் வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் உடன் நடித்திருந்தார். தற்போது ஜெயிலர் 2 படத்திற்காக அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ள தகவல் கோலிவுட் வட்டாரத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. ஜெயிலர் 2 படத்தை அடுத்த ஆண்டு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.

இதையும் படியுங்கள்... Jailer 2 : ஜெயிலர் 2 படத்தில் ரஜினிக்கு வில்லனாக களமிறங்கும் பிரபல மாஸ் நடிகர்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜெயிலர் 2
ரஜினிகாந்த்
Latest Videos
Recommended Stories
Recommended image1
New Tamil Movies : அடுத்த 2 மாதங்களில் ரிலீசாகும் படங்கள்! அடுத்தடுத்து வரும் மிரட்டலான அறிவிப்புகள்!
Recommended image2
Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
Recommended image3
Now Playing
61 வயதில் 3வது திருமணத்திற்கு தயாராகும் அமீர்கான்! காதலி கௌரி ஸ்ப்ராட்டுடன் விரைவில் திருமணம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved