Jailer 2: ஜெயிலர் 2 படத்தில் இவரா? பயங்கரமான ஆளாச்சே - வெளியான வேற லெவல் அப்டேட்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில், முக்கிய ரோலில் நடிக்க உள்ள நடிகர் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், 'கூலி' படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த் தற்போது எந்த விட ஓய்வும் எடுத்து கொள்ளாமல் 'ஜெயிலர் 2' படத்தில் இணைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கியதாக படக்குழு சன் பிச்சர்ஸ் நிறுவனம் அதிகார பூர்வமாக எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்த நிலையில், இந்த படத்தின் அப்டேட் பற்றிய தகவல்களுக்கான தலைவரின் ரசிகர்களும் ஆவலோடு கார்த்திருக்கின்றனர்.
Jailer 2 Shooting
தற்போது முதல் கட்டமாக, 'ஜெயிலர் 2' படத்தை சென்னை ராயப்பேட்டையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் தொடங்கி உள்ளதாகவம் , ரஜினியின் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து 2 வாரங்கள் அங்கே படப்பிடிப்பு நடக்கும் என்றும், இதன் பின்னர் ECR சாலையில் அமைந்துள்ள, பிரபல படப்பிடிப்பு ஸ்டுடியோவில், செட் போட்டு மீத காட்சிகளை படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Jailer 2: முத்துவேல் பாண்டியனின் வேட்டை ஆரம்பம் - ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!
Jailer 2 Movie Latest Update
'ஜெயிலர்' படத்தில் எந்த அளவுக்கு ரசிகர்கள் ரஜினிகாந்தை ரசித்தார்களோ அதே அளவுக்கு, இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷராப் போன்ற நடிகர்களின் நடிப்பும் அதிகம் கவனம் ஈர்த்தது. இதை தொடர்ந்து இரண்டாவது பாகத்தில் முதல் பாகத்தில் இருந்த நட்சத்திரங்கள் நடித்தாலும், அவர்களை விட சில மாஸான நடிகர்களையும் களமிறக்க லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளாராம்.
Nandamuri Balakrishna Cameo in Jailer 2
அந்த வகையில், தெலுங்கில் பார்வையாலேயே 100 ஆட்களை தெறித்து ஓட வைத்தும், ஒரே விரலால் ரயிலையே பின்னுக்கு செல்ல வைத்தும் மாஸ் காட்டிய பாலகிருஷ்ணா இப்படத்தில் இணைந்து நடிப்பதாக கூறப்படுகிறது. முதல் பாகத்திலேயே அவர் நடிக்க வேண்டியதாம், ஆனால் சில காரணங்களால் அது முடியாமல் போக... தற்போது இரண்டாவது பாகத்தில் அவர் நடிப்பது உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக இவருக்கு பெரிய தொகை சம்பளமாகவும் பேசப்பட்டுள்ளதாம்.
மாரி செல்வராஜும் வேண்டாம், மணிரத்னமும் வேண்டாம்; திடீரென இயக்குனரை மாற்றிய ரஜினி!