ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
'ஜெயிலர்' படத்தின் வெற்றிக்கு பிறகு ஜெயிலர் 2ஆம் பாகம் உருவாக இருக்கிறது. இதற்கான அறிவிப்பும், அறிவிப்பு டீசரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இந்த நிலையில் தான் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வந்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் ஜெயிலர். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து விநாயகன், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மிர்ணா மேனன், சுனில் ரெட்டி என்று ஏராளமானோர் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.220 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.650 கோடி வரையில் வசூல் குவித்தது. இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு ஜெயிலர் 2 படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு டீசர் வெளியானது. இந்த நிலையில் தான் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. இது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது எக்ஸ் பக்கத்தில் முத்துவேல் பாண்டியனின் வேட்டை ஆரம்பம்..ஜெயிலர் 2 படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது என்று குறிப்பிட்டு ரஜினிகாந்தின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது.
இன்று தொடங்கும் ஜெயிலர் 2 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு 15 நாட்கள் நடைபெறும். இந்த 15 நாட்களும் ரஜினிக்கான காட்சிகள் படமாக்கப்படும். அதன் பிறகு மற்ற நடிகர், நடிகைகளின் காட்சிகள் படமாக்கப்படும் என்று கூறப்படுகிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ஜெயிலர் ரூ.650 கோடி வசூல் குவித்த நிலையில் ஜெயிலர் 2 ரூ.1000 கோடி வரையில் வசூல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து மோகன் லால், சிவராஜ் குமார் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
