MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • உச்சத்தில் கார்த்திக்... உருக்கும் தனிப்பட்ட சோகம்! இந்த வெற்றிக்கு பின்னால் இவ்வளவு வலியா?

உச்சத்தில் கார்த்திக்... உருக்கும் தனிப்பட்ட சோகம்! இந்த வெற்றிக்கு பின்னால் இவ்வளவு வலியா?

Karthik Raj Awards Life Struggles: விருதுகளை வாங்கி குவிக்கும் கார்த்திக் ராஜின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகம் நடந்திருக்கும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

3 Min read
Author : Rsiva kumar
Published : Mar 16 2026, 02:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Karthik Raj Life Style
Image Credit : Zee Tamil You Tube

Karthik Raj Life Style

2017 ல் கனவு கண்ணனாக இருந்து ஒவ்வொரு இல்லத்தரசிகள் மற்றும் இளம் பெண்களின் மனதில் காதல் மன்னராக வாழ்ந்தவர் தான் நம் கார்த்திக் ராஜ். செம்பருத்தி சீரியல் ஆதி என்னும் கதாபாத்திரத்தில் நம் அனைவரும் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்தவர் கார்த்திக் ராஜ் ஆனால் இவரது வாழ்க்கையில் இப்படி ஒரு சோகம் நடந்திருக்கிறது என்று நம் யாருக்கும் தெரியாது. இவருக்கு திருமணம் நடைபெற்று விவாகரத்து பெற்று தற்போது தனிமையில் இருந்து வாழ்ந்து வருகிறார் என்று சொன்னால் பெண்களின் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

கார்த்திக் ராஜ்: ஜனவரி 21, 1988 கார்த்திக் ராஜ் பிறந்தார் இவர் காரைக்குடியில் பிறந்தவர். ஆனால் இவர் படித்தது வளர்ந்தது அனைத்தும் சென்னையில் தான்.கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சின்னத்திரையில் நடித்து வருகிறார். ஒரு நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் மாற்றிக் கொண்டார். இவருடைய அப்பா 30 ஆண்டுகாலம் சினிமாவில் இருந்துள்ளார். தயாரிப்பாளர் ஏ எல் ஸ்ரீனிவாசனுக்கு புரோடக்‌ஷன் மேனேஜராஜ பணியாற்றியுள்ளார். அதன் பிறகு எம்ஜிஆருக்கு உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.

25
Karthigai Deepam Serial
Image Credit : Zee Tamil You Tube

Karthigai Deepam Serial

சினிமாவிற்கு அறிமுகம்: தனது கல்லூரி படிப்பை சென்னையில் முடித்துவிட்டு ஒரு ஆடை வடிவமைப்பாளர் பணியாற்றினார் அதன் பிறகு தன் அப்பாவின் தயாரிப்பு நிறுவனத்தில் பற்றிய இவருக்கு தெரிந்த நிலையில் எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளரானார். கார்த்திக் ராஜ் சினிமாவில் அறிமுகமாக இதுவும் ஒரு காரணமாக இருந்தது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது நிகழ்ச்சியில் நடிகர், நடிகைகளை ஒருங்கிணைக்கும் வேலையை செய்து வந்தார்.

முதல் வாய்ப்பு: அதன் பிறகு தான் அவருக்கு கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை (கே5) சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இந்த தொடருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் நடிகை ஸ்ருதி ராஜ் உடன் இணைந்து நடித்தார். அதன் பின்னர் 2014ல் ஜோடி நம்பர் 1 சீசன்7ல் நான்சி ஜெனிஃபர் உடன் இணைந்து நடனம் ஆடினார். ஆனால் அந்த ரியாலிட்டி ஷோவில் பாதியிலேயே எலிமினேட் செய்யப்பட்டார்.

35
செம்பருத்தி சீரியல்:
Image Credit : Zee Tamil You Tube

செம்பருத்தி சீரியல்:

தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் இவர் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இந்த சீரியல் மூலம் இல்லத்தரசிகள் மற்றும் இளம் பெண்களின் மனதில் காதல் மன்னனாகவே வாழ்ந்து வந்தார் அந்த அளவிற்கு இவரது அழகும் நடிப்பும் குரலும் மிகவும் அருமையாக இருக்கும். ஆதித்யா என்னும் கேரக்டரில் இந்த சீரியலில் இவர் நடித்திருப்பார். ஒவ்வொரு பெண்ணுக்கு அண்ணனாகவும் காதல் மன்னனாகவும் ஆதித்யா என்னும் கேரக்டரில் வாழ்ந்தார் என்றும் சொல்லலாம். அதன் பிறகு இந்த சீரியலில் ஹீரோயினி கார்த்திகை மாமா மாமா என்று அழைப்பார் அதன் மூலம் அனைத்து பெண்களும் இவரை மாமா என்றும் கூறி வந்தார்கள். அந்த அளவிற்கு இவர் மிகவும் பிரபலம் அடைந்தார்.2020-ல் சில காரணங்களால் இந்தத் தொடரிலிருந்து அவர் விலகியது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சீரியலுக்கு பிறகு முகிலன் என்ற வெப் சீரிஸில் நடித்தார். ஆனால், இந்த சீரிஸ் பெரிய அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. 465 மற்றும் நாளு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்லை என்னும் 2 படத்தில் நடித்தார்.ஆனால் அது வெற்ற வெற்றியை தரவில்லை. கார்த்திகை தீபம்: கார்த்திகை தீபம் அப்போது தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திகை தீபம் என்ற சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், லீடு ரோலில் கார்த்திக் ராஜ் நடித்தார்.இந்த சீரியலில் முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 2ஆவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கார்த்திகை தீபம் சீரியல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

45
Karthik Raj Marriage Life
Image Credit : Zee Tamil You Tube

Karthik Raj Marriage Life

திருமணம் கார்த்திக் ராஜ் தனது 25 வயதில், 2013 ஆம் ஆண்டு, தனது 25வது வயதில் , முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த யாஷி நீண்ட நாளாக காதலித்து பெண்ணின் வீட்டில் சம்மதம் தெரிவிக்காததால் காதல் திருமணம் செய்ய முடிவெடுத்து பதிவுத் திருமணத்தில் மணந்தார்.இந்த ஜோடி முதல் முறையாக ஒரு டிவி சேனலில் பார்த்து காதலித்தனர். இருவரும் நீண்ட நாளாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் ஆரம்பத்தில் நன்றாகவே இவர்களது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் சிறு சிறு பிரச்சனைகள் மூலம் வந்து கொண்டே இருக்கின்றது. அதன் பிறகு வாழ்க்கை சந்தோஷங்கள் மூலம் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

55
விவாகரத்து:
Image Credit : Zee Tamil Serial

விவாகரத்து:

விவாகரத்து: கார்த்திக் ராஜும் அவரது மனைவியும் 2019 மற்றும் 2020 க்கு இடையில் விவாகரத்து பெற்றுபிரிந்தனர். தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர்களின் விவாகரத்து நடவடிக்கைகள் முடிவடைந்தன. கலப்பு மத திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி , விவரங்களை ரகசியமாக வைத்திருந்தனர். விவாகரத்து சான்றிதழ் பெற்ற பிறகு உண்மை அறிக்கையை வெளியிட்டனர்.

அதன் பிறகு கார்த்திக் ராஜ் தனிமையாகவே வாழ்ந்து வருகிறார் 2020 ஆம் ஆண்டு இவருக்கு விவாகரத்து பெற்ற நிலையில் இன்று வரை அவர் மறு திருமணம் செய்யாமல் தனியாகவே இருந்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. அவருடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி எந்த ஒரு மேடையிலும் பொது நிகழ்ச்சியிலும் அவர் வெளி வருவதை தவிர்த்துள்ளார்.தனிப்பட்ட குழப்பம் ராஜின் தொழில் வாழ்க்கையில் ஒரு குறுகிய பாதையிலேயே வாழ்ந்தார்.அந்த காலகட்டத்தில் அவர் சில தொலைக்காட்சி திட்டங்களிலிருந்து விலகினார். இந்தக் காலகட்டம் அவரது அடுத்தடுத்த தேர்வுகளைப் பாதித்தது. பிறகு சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து கார்த்திகை தீபத்தில் நடித்து தனது திறமை வெளிப்படுத்தி ரகசியங்களையும் மகிழ்ச்சி படுத்தி வருகிறார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
தொலைக்காட்சி
Latest Videos
Recommended Stories
Recommended image1
தேவசகாயத்திற்கு விபூதியடித்துவிட்டு எஸ்கேப் ஆகும் ஜனனி.. தொக்கா மாட்டும் அறிவுக்கரசி - எதிர்நீச்சல் தொடர்கிறது
Recommended image2
கோமதியை பகடைக் காயாக பயன்படுத்தும் தாய் கிழவி... ஈகோவை தூக்கி எறிவாரா பாண்டியன்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image3
ரவி பெயரில் நீத்து தொடங்கிய புது பிசினஸ்... முத்து - மீனா இடையே வெடித்த மோதல் - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved