மாரி செல்வராஜும் வேண்டாம், மணிரத்னமும் வேண்டாம்; திடீரென இயக்குனரை மாற்றிய ரஜினி!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிப்பதாக இருந்த ரஜினிகாந்த், திடீரென அவரை நீக்கிவிட்டு வேறொரு முன்னணி இயக்குனருடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.

ரஜினிகாந்தின் கூலி
தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். அவர் நடிப்பில் தற்போது கூலி திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், நாகார்ஜுனா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இப்படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.
அடுத்தது ஜெயிலர் 2
கூலி திரைப்படத்தில் நடித்து முடிந்த பின் மூன்று மாதங்கள் ஓய்வெடுக்க உள்ள ரஜினிகாந்த், அந்த நேரத்தில் தன்னுடைய சுயசரிதையை புத்தகமாக எழுதவும் திட்டமிட்டுள்ளாராம். அதன்பின்னர் நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ள ஜெயிலர் படத்தின் 2ம் பாகத்திற்கான ஷூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளாராம் ரஜினிகாந்த். அப்படத்தையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்க உள்ளது. அனிருத் தான் இந்த படத்திற்கும் இசையமைக்க உள்ளார். இதன் ஷூட்டிங் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளது.
இதையும் படியுங்கள்... Rajinikanth : மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் - காரணம் என்ன?
மாரி செல்வராஜுக்கு நோ சொன்ன ரஜினி
கூலி, ஜெயிலர் 2 படங்களை முடித்த பின்னர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள அவரின் 173-வது படத்தை யார் இயக்கப்போகிறார்கள் என்கிற கேள்வி எழுந்த வண்ணம் இருந்தது. முதலில் மணிரத்னம் இப்படத்தை இயக்க இருப்பதாக பேச்சு அடிபட்டது. பின்னர் அவருக்கு பதில் மாரி செல்வராஜ் அப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் திடீரென மாரி செல்வராஜ் படத்தில் நடிக்கும் முடிவை கைவிட்ட ரஜினிகாந்த், தற்போது எதிர்பாரா கூட்டணியில் இணைந்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் ரஜினிகாந்த்?
அதன்படி நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு தற்போது இயக்குனர் வெற்றிமாறனுக்கு சென்றிருக்கிறதாம். திடீரென வெற்றிமாறனிடம் கதை கேட்க அழைப்பு விடுத்தாராம் ரஜினிகாந்த். உடனடியாக தனக்கு ஒரு ஸ்கிரிப்ட் தயார் செய்யுமாறும் கூறி இருக்கிறாராம். இதனால் இவர்கள் கூட்டணியில் ஒரு தரமான படம் உருவாக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. தற்போது இயக்குனர் வெற்றிமாறன் சூர்யாவின் வாடிவாசல் பட பணிகளில் பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Jailer 2 : ஜெயிலர் 2 படத்தில் ரஜினிக்கு வில்லனாக களமிறங்கும் பிரபல மாஸ் நடிகர்!