Rajinikanth : மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் - காரணம் என்ன?
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிப்பதாக இருந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது திடீரென அப்படத்தில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளாராம்.

மாரி செல்வராஜுக்கு நோ சொன்ன ரஜினி
தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். அவர் நடிப்பில் தற்போது கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை இந்த ஆண்டு மே மாதம் திரைக்கு கொண்டுவர உள்ளனர்.
ரஜினியின் பிளான்
கூலி படத்தை தொடர்ந்து மூன்று மாதம் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ள ரஜினிகாந்த், அந்த காலகட்டத்தில் தன்னுடைய சுய சரிதையை எழுதவும் முடிவெடுத்துள்ளாராம். அதன்பின்னர் தான் நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ள ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளாராம் ரஜினிகாந்த். இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்க உள்ளது. முதல் பாகத்தை விட மிக பிரம்மாண்டமாக ஜெயிலர் 2 படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்களாம். இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Jailer 2 : ஜெயிலர் 2 படத்தில் ரஜினிக்கு வில்லனாக களமிறங்கும் பிரபல மாஸ் நடிகர்!
அடுத்தது ஜெயிலர் 2
கூலி, ஜெயிலர் 2 படங்களை தொடர்ந்து ரஜினி யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்கிற கேள்வி நீண்ட நாட்களாகவே உள்ளது. சிலரோ அவர் ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து சினிமாவை விட்டே விலகப்போகிறார் என்றெல்லாம் புரளியை கிளப்பி வருகிறார்கள். ஆனால் உண்மையில் அடுத்த படத்திற்கான கதை கேட்கும் பணிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார் ரஜினி. அதன்படி மாரி செல்வராஜ், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து கதை கூறி இருக்கிறார்.
மாரி செல்வராஜ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன்?
மாரி செல்வராஜ் படங்கள் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் யோசித்த ரஜினிகாந்த், மாரி செல்வராஜ் படத்திற்கு நோ சொல்லிவிட்டாராம். சர்ச்சையில் சிக்கி ரிஸ்க் எடுக்க விரும்பாததால் ரஜினிகாந்த் அவர் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதனால் சூப்பர்ஸ்டாரின் அடுத்த படம் வேறு இயக்குனருக்கு கைமாறி இருக்கிறது. அது யார் என்பது விரைவில் தெரியவரும்.
இதையும் படியுங்கள்... 20 வருடங்களாக ரகசிய தியானம் செய்யும் ரஜினிகாந்த்; காரணம் என்ன தெரியுமா?