MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Jailer 2 : ஜெயிலர் 2 படத்தில் ரஜினிக்கு வில்லனாக களமிறங்கும் பிரபல மாஸ் நடிகர்!

Jailer 2 : ஜெயிலர் 2 படத்தில் ரஜினிக்கு வில்லனாக களமிறங்கும் பிரபல மாஸ் நடிகர்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் வில்லன் யார் என்கிற அப்டேட் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 17 2025, 02:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஜெயிலர் 2 அப்டேட்

ஜெயிலர் 2 அப்டேட்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்ட திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கிய இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் ரம்யா கிருஷ்ணன், வஸந்த் ரவி, மிர்ணா, யோகிபாபு, ஷிவ ராஜ்குமார், விநாயகன், தமன்னா, சுனில், ரெடின் கிங்ஸ்லி என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்திருந்தது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்து இருந்தது.

24
நெல்சன் இயக்கத்தில் ரஜினி

நெல்சன் இயக்கத்தில் ரஜினி

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி பாக்ஸ் ஆபிஸில் ரூ.650 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து இருந்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பிற மொழிகளிலும் இப்படம் அமோக வெற்றியை பெற்றது. ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இதையும் படியுங்கள்... 20 வருடங்களாக ரகசிய தியானம் செய்யும் ரஜினிகாந்த்; காரணம் என்ன தெரியுமா?

34
ஜெயிலர் 2 வில்லன் அப்டேட்

ஜெயிலர் 2 வில்லன் அப்டேட்

கூலி படத்தை முடித்த கையோடு, ஜெயிலர் 2 பட பணிகளை தொடங்க உள்ளார் ரஜினி. அப்படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தைவிட படு பிரம்மாண்டமாக ஜெயிலர் 2 படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார் நெல்சன். இப்படத்திற்கான கதாபாத்திர தேர்வும் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தில் வில்லனாக மிரட்டிய விநாயகன் கேரக்டர் இறுதியில் கொல்லப்பட்டதால், இரண்டாம் பாகத்தில் அந்த அளவுக்கு டெரர் வில்லனை களமிறக்கும் ஐடியாவில் உள்ளாராம் நெல்சன்.

44
ஜெயிலர் 2வில் எஸ்.ஜே.சூர்யா?

ஜெயிலர் 2வில் எஸ்.ஜே.சூர்யா?

தற்போதைய நிலவரப்படி ஜெயிலர் 2 படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இதற்கு முன்னதாக ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்திராத எஸ்.ஜே.சூர்யா, முதன்முறையாக ஜெயிலர் 2 படத்தின் மூலம் கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த காம்போ மட்டும் உறுதியானால் ஜெயிலர் 2 படம் வேறலெவலில் இருக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... அடேங்கப்பா ஜெயிலர் 2 படத்துக்கு இத்தனை கோடி சம்பளமா? ஏ ஆர் ரஹ்மானையே மிஞ்சிய அனிருத்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜெயிலர் 2
Latest Videos
Recommended Stories
Recommended image1
க்யூவில் நிற்கும் விஜய், சூர்யா படங்கள்... எலெக்‌ஷனுக்கு பின் களைகட்டப்போகும் கோலிவுட் - ஒரு பார்வை
Recommended image2
Now Playing
MGR - Saroja Devi | காத்திருந்த எம்ஜிஆர்...காதலை நிராகரித்த சரோஜா தேவி..! கெத்து காட்டிய பைங்கிளி !
Recommended image3
கனிகா அவுட்! எதிர்நீச்சல் 2 சீரியலில் இனி ஈஸ்வரியாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved