MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சிவகார்த்திகேயனுக்கு ஸ்கெச் போட்ட லோகேஷ் கனகராஜ்! ஹீரோயினாகும் டாப் ஹீரோவின் மகள்!

சிவகார்த்திகேயனுக்கு ஸ்கெச் போட்ட லோகேஷ் கனகராஜ்! ஹீரோயினாகும் டாப் ஹீரோவின் மகள்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்க உள்ள படம் மற்றும் அந்த படத்தின் ஹீரோ - ஹீரோயின் குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
Published : Apr 24 2025, 01:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

லோகேஷ் கனகராஜ்:

தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் முன்னணி இயக்குனராக உயர்த்திருப்பவர் லோகேஷ் கனகராஜ். கோயம்புத்தூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட லோகேஷ் கனகராஜ், பேங்க் வேலையில் கைநிறைய சம்பளம் வாங்கி வந்தாலும், சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குறும்படங்கள் மூலம் தன்னுடைய திறமையை வெளிப்படுத்த துவங்கினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Lokesh Kangaraj Debut Managaram Movie:

Lokesh Kangaraj Debut Managaram Movie:

லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம்:

பின்னர் 2016 ஆம் ஆண்டு 'அவியல்' என்ற ஆந்தாலஜி படத்தில், லோகேஷ் கனகராஜ் படைப்பு இடம்பெற வாய்ப்பு வழங்கியவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ராஜ் தான். இதை தொடர்ந்து,  2017 ஆம் ஆண்டு த்ரில்லர் கதையை மையமாக வைத்து, 'மாநகரம்'  படத்தின் மூலம், அறிமுக படத்திலேயே சிறந்த இயக்குனராக ரசிகர்களால் அறியப்பட்டார்.  சிறு பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், சந்தீப் கிஷான், ரெஜினா கஸாண்ட்ரா, முனீஷ்காந்த், சார்லி, ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

திடீர் என சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த லோகேஷ் கனகராஜ்!
 

35
Kaithi Super hit:

Kaithi Super hit:

 

இதை தொடர்ந்து கார்த்தியை வைத்து இவர் இயக்கிய 'கைதி' திரைப்படம் தாறு மாறு ஹிட் அடித்தது. இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் தேர்வு லோகேஷ் கனகராஜாக மாறினார். மேலும் விஜய்யை வைத்து மாஸ்டர், கமல் ஹாசனுடன் விக்ரம், 2-ஆவது முறையாக விஜய்யை வைத்து இயக்கிய லியோ என இதுவரை தோல்வியே கொடுத்திடாத இயக்குனராக உயர்ந்து நிற்கிறார். 

45
Lokesh Kanagaraj Vijay film Leo

Lokesh Kanagaraj Vijay film Leo

'கூலி' படத்தை இயக்கி முடித்துள்ளார்:

'லியோ' படத்தை தொடர்ந்து, தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து, 'கூலி' படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் தங்க கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் தேவா என்கிற கதாபாத்திரத்தில், கேங் ஸ்டாராக நடித்துள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து, நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாகீர், ஸ்ருதி ஹாசன், மோனிகா ஜான் போன்ற பலர் நடித்துள்ளனர்.

நடிகர் ஸ்ரீ மீட்கப்பட்டாரா? லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

55
Lokesh Kanagaraj

Lokesh Kanagaraj

அடுத்த படத்தில் கவனம்: 

ஆகஸ்ட் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள, இந்த படத்தின் புரமோஷன பணிகள் கூடிய விரைவில் துவங்க உள்ளதால் லோகேஷ் கனகராஜ், சமூக வலைப்பக்கங்களில் இருந்து விலகுவதாகவும் அண்மையில் அறிவித்தார். இது ஒருபுறம் இருக்க, லோகேஷ் கனகராஜ் 'கூலி' படத்தின் ப்ரீ புரோடக்ஷன் பணிகளை கவனித்துக் கொண்டே, தன்னுடைய அடுத்த படத்தின் கதையை எழுதி முடித்ததோடு இந்த படத்தில் நடிக்க உள்ள ஹீரோ மற்றும் ஹீரோயின் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறாராம். இதுகுறித்து தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி, சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக கமல்ஹாசனின் மகளும் கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஸ்ருதி ஹாசனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது (Sivakarthikeyan's next film: Is Lokesh teaming up with Shruti?).

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கமல்ஹாசன்
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமா
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved