திடீர் என சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த லோகேஷ் கனகராஜ்!
கூலி திரைப்படத்தை இயக்கியுள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தற்காலிகமாக சமூக வலைதள பக்கத்தில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு வெளியான 'மாநகரம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அடி எடுத்து வைத்தவர் லோகேஷ் கனகராஜ். முக்கோண காதல் கதையை மிகவும் நேர்த்தியாக இயக்கி பாராட்டுகளை பெற்ற லோகேஷ் கணகராஜ், முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதை தொடர்ந்து ஹீரோயினே இல்லாமல் நடிகர் கார்த்தியை வைத்து 'கைதி' திரைப்படத்தை அதிரடி கதைக்களத்தில் இயக்கி ரசிகர்களை வியக்க வைத்தார்.
Lokesh Kanagaraj Movies:
லோகேஷ் கனகராஜின் படங்கள்:
இந்த திரைப்படம் யோகேஷ் கனகராஜை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. இதன் பின்னர் தளபதி விஜயுடன் மாஸ்டர், கமல்ஹாசனை விக்ரம், மற்றும் லியோ போன்ற படங்களை இயக்கினார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும், வசூல் ரீதியாகவும்... விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
Coolie Release Date: சவுண்ட ஏத்து! தேவா வர்ராரு; 'கூலி' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Lokesh Kanagaraj Rajinikanth Coolie film Release
அதிர்ச்சி கொடுத்த லோகேஷ் கனகராஜ்:
'லியோ' படத்தை இயக்கி முடித்த கையோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து கூலி படத்தை இயக்குவதை உறுதி செய்தார். அதன்படி தற்போது கூலி படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இப்படத்தின் பிரமோஷன் பணிகளில் கலந்து கொள்ள உள்ளதால், தற்காலிகமாக சமூக வலைதள பக்கத்தில் இருந்து விலகுவதாக கூறி லோகேஷ் கனகராஜ் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
Lokesh Kanagaraj break in social media
பான் இந்தியா படமாக கூலி உருவாகியுள்ளது:
பான் இந்தியா படமாக உருவாகியுள்ள, 'கூலி' படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேவா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தங்க கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில், நாகர்ஜுனா, உப்பேந்திரா, ஸ்ருதி ஹாசன் போன்ற பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Rajinikanth Coolie Movie: திட்டமிட்டபடி 'கூலி' படம் வெளியாவதில் சிக்கல்? என்ன காரணம்!