ரெட்ரோ சூர்யாவிற்காக எழுதப்பட்ட கதையே கிடையாது - இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மனம் திறந்து பேசியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ்:
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ரெட்ரோ. இந்தப் படத்தில் சூர்யா உடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், சுவாஸிகா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். வரும் மே 1 ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது. ரூ.65 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன.
Suriya not First Choice in Retro:
சூர்யாவிற்காக எழுதப்பட்ட கதை கிடையாது:
சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம் பெற்ற கனிமா பாடல் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆகிவிட்டது. இந்த நிலையில் தான் படம் பற்றி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இப்போது பேசி வருகிறார். ரெட்ரோ படம் நடிகர் சூர்யாவிற்காக எழுதப்பட்ட கதை கிடையாது. அந்தப் படத்தின் கதை ரஜினிகாந்திற்காக எழுதப்பட்டது.
இதுவரை எந்த தமிழ் படத்துக்கு செய்யாததை ‘ரெட்ரோ’ படத்துக்காக செய்த பூஜா ஹெக்டே!
Rajinikanth:
சூர்யா கதைக்குள் வரவே திருமணத்தை காதலாக மாற்றிவிட்டேன்:
கேங்ஸ்டராக இருக்கும் ஒருவர் திருமணம் செய்து, திருமணத்திற்கு பிறகு குடும்பத்திற்காக வாழ ஆரம்பிக்கிறார். இதற்கு கேங்ஸ்டர் வாழ்க்கை எப்படி இடையூறாக இருக்கிறது? குடும்பமா? கேங்க்ஸ்டர் வாழ்க்கையா? என்பது தா கதை. இது ரஜினிக்கான கதையாக இருந்தது. அதன் பிறகு சூர்யா கதைக்குள் வரவே திருமணத்தை காதலாக மாற்றிவிட்டேன்.
Thalapathy Vijay Reject Karthik Subbaraj Story:
விஜய்க்கு மட்டும் கதைகளை எழுத முடியவில்லை:
விஜய்க்கு கூட நான் சில கதைகள் சொல்லியிருந்தேன். ஆனால், எந்த கதையும் அவருக்கு பிடிக்கவில்லை. ரஜினிக்கு ஒரு கிராமத்து கதை கூட தேர்வு செய்தோம். அந்த கதை அவருக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. ஆனால், அந்தக் கதையில் அவரால் நடிக்க முடியவில்லை. விஜய்க்கு மட்டும் என்னால் சரியான கதைகளை எழுத முடியவில்லை என்று கூறியுள்ளார்.
‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சி தந்த மாஸ்டர் பீஸ் டைரக்டர்கள் இத்தனை பேரா? முழு லிஸ்ட்