இதுவரை எந்த தமிழ் படத்துக்கு செய்யாததை ‘ரெட்ரோ’ படத்துக்காக செய்த பூஜா ஹெக்டே!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ரெட்ரோ படத்திற்காக நடிகை பூஜா ஹெக்டே செய்துள்ள செயல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

Retro Movie Pooja Hegde : கங்குவா படத்தின் தோல்விக்கு பின்னர் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ரெட்ரோ. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், தரக் பொன்னப்பா, தமிழ், கிருஷ்ணகுமார் பாலசுப்ரமணியன், பிரேம் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ரெட்ரோ திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நடிகர் சூர்யாவின் படத்திற்கு அவர் இசையமைப்பது இதுவே முதன்முறை ஆகும்.
Retro Suriya
ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். ஜாக்கியும், மாயபாண்டியும் கலை இயக்குனர்களாக பணியாற்றி உள்ள இப்படத்தை 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற மே 1ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கான அப்டேட்டுகள் வரிசையாக வெளியான வண்ணம் உள்ளன. இந்நிலையில், இப்படத்திற்காக நடிகை பூஜா ஹெக்டே செய்துள்ள செயல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படியுங்கள்.... நடிகர் சூர்யா நடிப்பில் “ரெட்ரோ” படத்தில் இருந்து கண்ணாடி பூவே; ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!
Pooja Hegde Dubbing For Retro Movie
அதன்படி ரெட்ரோ படத்திற்கு பூஜா ஹெக்டே தான் தமிழில் டப்பிங் பேசி இருக்கிறார். அவர் தமிழில் டப்பிங் பேசி உள்ளது இதுவே முதன்முறை ஆகும். இதற்கு முன்னர் தமிழில் அவர் நடித்த முகமூடி, பீஸ்ட் ஆகிய படங்களில் அவருக்கு வேறொருவர் தான் குரல் கொடுத்திருந்தார். ஆனால் ரெட்ரோ படத்திற்காக தமிழ் கற்று வெற்றிகரமாக டப்பிங்கும் பேசி முடித்துள்ளாராம் பூஜா ஹெக்டே. அவரின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.
Pooja Hegde Upcoming Movies
ரெட்ரோ படத்தை தொடர்ந்து நடிகை பூஜா ஹெக்டேவுக்கு தமிழில் மூன்று பிரம்மாண்ட படங்கள் லைன் அப்பில் உள்ளன. அதில் கூலி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டிருக்கிறார். இதுதவிர நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் பூஜா. இது நடிகர் விஜய்யின் கடைசி படமாகும். மேலும் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் காஞ்சனா 4 திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.
இதையும் படியுங்கள்.... கூலி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?