- Home
- Cinema
- கோலிவுட்டை ஆளும் 'குயின்ஸ்': சம்பளத்தில் போட்டி.. நடிப்பில் வேட்டை; தமிழ் சினிமாவின் டாப் டிரெண்டிங் ஹீரோயின்ஸ் யார் யார்?
கோலிவுட்டை ஆளும் 'குயின்ஸ்': சம்பளத்தில் போட்டி.. நடிப்பில் வேட்டை; தமிழ் சினிமாவின் டாப் டிரெண்டிங் ஹீரோயின்ஸ் யார் யார்?
Top Trending Tamil Heroines 2026: தமிழ் சினிமா இப்போது பல நடிகைகளை உருவாக்கிக் கொண்டு வருகின்றது. தெலுங்கு, மலையாளம் போன்ற மாநிலங்களில் இருக்கும் ஹீரோனிகள் தமிழ் சினிமாவிலும் டிரெண்டிங் ஹீரோயினாக வலம் வருகின்றன.

கோலிவுட்டை ஆளும் 'குயின்ஸ்': சம்பளத்தில் போட்டி.. நடிப்பில் வேட்டை; தமிழ் சினிமாவின் டாப் டிரெண்டிங் ஹீரோயின்ஸ் யார் யார்?
தமிழ் சினிமா இப்போது பல நடிகைகளை உருவாக்கிக் கொண்டு வருகின்றது. ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹீரோயினிகள் ஒருத்தர் கூட படம் நடிப்பதற்கு வாய்ப்பும் தரவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. ஆனால் தெலுங்கு, மலையாளம் , போன்ற மாநிலங்களில் இருக்கும் ஹீரோனிகள் தமிழ் சினிமாவிலும் டிரெண்டிங் ஹீரோயினாக வலம் வருகின்றன. நடிப்பு ஒரு புறம் இருக்க சமூக வலைத்தளங்களிலும் அப்டேட் ஆக இருக்க வேண்டும் என்பதே தமிழ் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இவர்கள் யார் யார் டிரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
1. நயன்தாரா:
நயன்தாரா இந்த ஆண்டு 2026 இவருடைய ஆண்டாக இருக்கப் போகிறது என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் இவருடைய எட்டு படங்கள் நடித்துக் கொண்டிருப்பதாகவும் சில படங்கள் வெளியாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இவர் சமூகவலைத்திலும் அப்டேட் ஆகவே இருப்பார். இல்லாமல் தற்போதைய தமிழ்நாடு அரசின் பெஸ்ட் ஹீரோயின் அவார்டும் அவருடைய ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இரண்டு அவார்டுகள் வாங்கியுள்ளார். கதை முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் மட்டும் இவர் நடித்து வருவதாகவும் அதன் மிகப் பெரிய வெற்றி படங்களாகவும் இவருக்கு அமையப்போவதாகவும் சொல்லப்படுகிறது.
2.சாய் பல்லவி:
அமரன் படம் வெற்றிக்குப் பிறகு இவரது பெயர் உச்சத்துக்கு சென்றது. இவருடைய சிறப்பான நடனம், மேக்கப் போடாமல் இருக்கும் இயல்பான குணம் என்று அனைத்திலும் இவர் சிறப்பாக விளங்குவதால் ரசிகர்களால் இவர் மிகவும் ஈர்க்கப்பட்டார் என்று சொல்லலாம். சில மாதங்களுக்கு முன்பு இவருடைய தங்கைக்கு திருமணம் நடைபெற்றது: இவர் திருமண விழாவில் தங்கையுடன் சேர்ந்து மிகவும் அழகாக நடனமாடிருப்பார் அது ரசிகர்களால் மிகவும் லாயக்குகளை வாரிக்குவித்தது. தங்கையின் பாசம் என்று அனைத்திலும் இவர் மிகவும் சிறந்து விளங்கியதால் தமிழ்நாட்டு ரசிகர் மட்டுமல்லாமல் இந்திய ரசிகர்களாலும் இவர் மிகவும் ஈர்க்கப்பட்டார்.
3 ராஷ்மிகா மந்தனா:
புஷ்பா 2 மற்றும் குபேரா என மெகா பட்ஜெட் படங்களில் நடித்து வெற்றிகளை பெற்றார் ரஷ்மிகா மந்தனா. இப்போது விஜய் தேவர் கொண்டவுடன் திருமணம் நடக்க போவதாகவும் நிச்சயதார்த்தம் முடிந்ததாகவும் சமூக வலைதளங்களில் செய்தி பரவி வந்தது இதனால் தற்போது இவர்கள் இருவரும் ட்ரெண்டிங்கில் உள்ளனர் என்று சொல்லலாம்.
4. கீர்த்தி சுரேஷ்:
ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா என்ன நாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். தமிழ்நாட்டு அரசு விடுதியில் இவர் சிறந்த நாயகி காண விருதை முதலமைச்சரிடம் இருந்து பெற்றார் இதை தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
5.த்ரிஷா:
பொன்னியின் செல்வம் படத்தில் குந்தவையாக வந்த அனைவரையும் வியப்பில் ஆற்றினார் திரிஷா அவருடைய உடையும் நகையும் அழகும் தமிழ் நாட்டையே ட்ரெண்டிங் ஆக்கிவிட்டது என்றே சொல்லலாம். விஜய் நடித்த லியோ படத்தில் மிகவும் அமைதியான சூழ்நிலையும் உள்ள ஹீரோயினியாக நடித்து மாஸ் காட்டி இருப்பார் திரிஷா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.