MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Fauzi : சுபாஷ் சந்திரபோஸின் சீக்ரெட் ஸ்பையாக பிரபாஸ்... ஃபௌஜி படத்தின் வேற லெவல் டீசரில் இதெல்லாம் நோட் பண்ணீங்களா.. !

Fauzi : சுபாஷ் சந்திரபோஸின் சீக்ரெட் ஸ்பையாக பிரபாஸ்... ஃபௌஜி படத்தின் வேற லெவல் டீசரில் இதெல்லாம் நோட் பண்ணீங்களா.. !

Fauzi Teaser : பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்துப் போராடும் சீக்ரெட் ஸ்பையாக பிரபாஸ் மிரட்டுகிறார். அவரது 47வது பிறந்தநாளில் வெளியான இந்த வின்டேஜ் லுக்கை பார்த்து ஃபேன்ஸ் கொண்டாடி வருகிறார்கள்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 24 2026, 12:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Prabhas Fauzi Movie Teaser Out
Image Credit : X

Prabhas Fauzi Movie Teaser Out

பிரபாஸின் 47வது பிறந்தநாளை முன்னிட்டு 'ஃபௌஜி' படக்குழு ஃபர்ஸ்ட் டீஸரை ரிலீஸ் செய்துள்ளனர். 'ஃபைல் நம்பர் 25' என்ற பெயரில் வெளியான இந்த வீடியோ, சுதந்திரப் போராட்ட பின்னணியில் நடக்கும் ஆக்‌ஷன் டிராமா என்பதை உறுதி செய்கிறது. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜெர்மன் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சந்திப்பது போல டீஸர் தொடங்குகிறது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே நடுங்க வைக்கும் ஒரு மர்மமான இந்திய சூப்பர் ஸ்பை பற்றி போஸ் பேசுவது செம கியூரியாசிட்டியை ஏற்படுத்துகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சீக்ரெட் ஸ்பையாக நடித்துள்ள பிரபாஸ்
Image Credit : Instagram

சீக்ரெட் ஸ்பையாக நடித்துள்ள பிரபாஸ்

அதன்பிறகு பெரிய மெஷின் கன்னுடன் பிரபாஸ் மாஸாக என்ட்ரி கொடுக்கிறார். நம் நாட்டின் சுதந்திரத்தைப் பறித்த பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்துப் போராடுவேன் என அவர் பேசும் வாய்ஸ் ஓவர் கூஸ்பம்ப்ஸ் வரவழைக்கிறது. பகவத் கீதை ரெஃபரன்ஸுடன் வரும் ஒரு கோடு வேர்ட் இந்த கேரக்டரின் மிஷனுக்கு கூடுதல் டெப்த் கொடுக்கிறது. டீஸர் வெளியானதில் இருந்தே பிரபாஸின் ரஃப் லுக் மற்றும் ஸ்கிரீன் பிரசன்ஸ் பற்றித்தான் ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள். பழைய ஆக்‌ஷன் ஹீரோ பிரபாஸை மீண்டும் பார்ப்பதாக சிலரும், பீரியாடிக் செட்டப்பில் அவரைப் பார்ப்பது த்ரில்லிங்காக இருப்பதாக பலரும் கொண்டாடி வருகிறார்கள்.

34
ரசிகர்கள் சொல்வதென்ன?
Image Credit : PR Team

ரசிகர்கள் சொல்வதென்ன?

யூடியூபில் ஒரு ரசிகர் "பாகுபலி எரா திரும்பி வந்துருச்சு.. இது பிரபாஸின் வின்டேஜ் எரா" என்றும், மற்றொருவர் "இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார்" என்றும் கமெண்ட் செய்துள்ளனர். ஆனால், போஸ் - ஹிட்லர் சீன் பற்றி சில கேள்விகளும் எழுந்துள்ளன. பிரபாஸ் கேரக்டருக்கு பில்டப் கொடுக்கவே இந்த வரலாற்றுத் தலைவர்களைப் பயன்படுத்தியிருப்பதாக சிலர் சொல்கிறார்கள். அந்த உரையாடலைக் காட்டிய விதமும் சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சோஷியல் மீடியாவில் இந்த சீனில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற விவாதமும் நடக்கிறது.

44
ஃபௌஜி டீம்
Image Credit : instagram

ஃபௌஜி டீம்

"இது போஸ் மற்றும் ஹிட்லருக்கு இடையே நடக்கும் ஏஐ உரையாடல்" என ஒரு நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார். பிரபாஸ் லுக் எந்த அளவுக்கு வைரலாகிறதோ, அதே அளவுக்கு வரலாற்று நிகழ்வுகளைக் காட்டிய விதமும் பேசுபொருளாகியுள்ளது. ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் இந்த பீரியாடிக் ஆக்‌ஷன் டிராமாவை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பேனரில் நவீன் எர்னேனி, ஒய் ரவிசங்கர் மற்றும் பூஷன் குமார் தயாரிக்கிறார்கள். டி-சீரிஸ் ஃபிலிம்ஸ் இந்த ப்ராஜெக்ட்டை வழங்குகிறது.

டீஸரில் கதையின் பின்னணி மற்றும் ஹீரோவின் கேரக்டர் பற்றி சின்ன ஹிண்ட் கொடுத்திருந்தாலும், முழு கதையையும் படக்குழு ரிவீல் செய்யவில்லை. ஃபிக்‌ஷனல் சூப்பர் ஸ்பை, சுதந்திரப் போராட்டம், பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகள் என பிரபாஸை ஒரு புது கோணத்தில் பார்க்கப் போகிறோம் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. ஃபௌஜி திரைப்படம் 2027 மார்ச் 19ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. ஃபர்ஸ்ட் டீஸரிலேயே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இந்த படத்தில், எதிரிகளின் தூக்கத்தைக் கெடுக்கும் மாவீரனாக பிரபாஸை திரையில் பார்க்க ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் செய்கிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிரபாஸ்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Scene First Review : சூர்யாவின் சீன் படம் பிளாஸ்டா? வேஸ்டா? முதல் விமர்சனம் இதோ
Recommended image2
சிம்புவுக்கு எப்போ கல்யாணம்? அனிருத்தின் திருமணத்தை கணித்த ஜோதிடரின் கணிப்பால் ஷாக் ஆன STR ரசிகர்கள்
Recommended image3
Sai Pallavi : சீதையாக நடிக்க சைவத்துக்கு மாறினாரா சாய் பல்லவி? அவரே போட்டுடைத்த உண்மை
Related Stories
Recommended image1
Prabhas Films Box Office Collection: முதல் 7 நாட்களில் அதிகம் வசூல் செய்த பிரபாஸின் டாப் 7 படங்கள் எது?
Recommended image2
Prabhas Marriage : பேச்சிலர் வாழ்க்கைக்கு எண்டு கார்டு போடும் பிரபாஸ்? கல்யாணம் எப்போ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved