- Home
- Gallery
- Prabhas Films Box Office Collection: முதல் 7 நாட்களில் அதிகம் வசூல் செய்த பிரபாஸின் டாப் 7 படங்கள் எது?
Prabhas Films Box Office Collection: முதல் 7 நாட்களில் அதிகம் வசூல் செய்த பிரபாஸின் டாப் 7 படங்கள் எது?
பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி 2898 AD திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றுள்ளது. நடிகர் பிரபாஸுக்கு மீண்டும் வெற்றி கிடைத்துள்ளது. முதல் 7 நாட்களில் பிரபாஸின் டாப் 7 படங்கள் என்னென்ன இடம்பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம்.

Prabhas Films Box Office Collection
எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா நடிப்பில் வெளியான பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரும் வெற்றியை அடைந்ததது. பாகுபலி முதல் 7 நாட்களில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ 247 கோடி/ரூ 2.47 பில்லியன் பெற்றுள்ளது.
Kalki 2898 AD
நாக் அஸ்வின் இயக்கத்தில், கமல் ஹாசன், அமிதாப் பச்சன் , திஷா பதானி நடிப்பில் வெளியாகி உலக அளவில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது கல்கி 2898 கி.பி. இது முதல் 7 நாட்களில் ரூ.150 கோடி/ரூ 1.5 பில்லியன் ஆகும்.
Saaho
சாஹோ படத்தில் ஷ்ரத்தா கபூர், அருண் விஜய் என பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியான இப்படம் சரியாக வசூல் செய்யவில்லை. 7 நாட்களில் ரூ 116.03 கோடி/ரூ 1.16 பில்லியன் வசூல் செய்தது.
Salaar
கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிரித்விராஜ் நடிப்பில் வெளியான சலார் திரைப்படம் முதல் 7 நாட்களில் ரூ 100 கோடி/ரூ 1 பில்லியன் வசூல் செய்தது.
Baahubali
யாரும் எதிர்பார்க்காத வகையில் பாகுபலி முதல் பாகம் வெளியாகி பெரும் வசூலை வாரிக்குவித்தது. முதல் 7 நாட்களில் பாகுபலி படம் ரூ 45 கோடி/ரூ 450 மில்லியன் வசூலித்தது.
Adipurush
பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் நடிப்பில், ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு வந்த ஆதிபுருஷ் படம் சரியாக ஓடவில்லை. ரூ 121.15 கோடி/ரூ 1.21 பில்லியன் பெற்றுள்ளது.
Radhe Shyam
பூஜா ஹெக்டேவுடன் பிரபாஸ் நடித்த ராதே ஷ்யாம் படம் சுமாராக ஓடியது. இப்படம் முதல் ஏழு நாட்களில் ரூ 18.20 கோடி/ ரூ 182 மில்லியன் வசூல் செய்தது.
மீண்டும் இணையும் ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. முயற்சி எடுத்த இயக்குனர் வெற்றிமாறன்.. தீயாய் பரவும் தகவல்