Malayalam English Kannada Telugu Tamil Bangla Hindi Marathi
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • எடப்பாடியை வணங்கி உரையை தொடங்கிய செங்கோட்டையன்.! ஆச்சர்யத்தில் அதிமுக எம்எல்ஏக்கள்

எடப்பாடியை வணங்கி உரையை தொடங்கிய செங்கோட்டையன்.! ஆச்சர்யத்தில் அதிமுக எம்எல்ஏக்கள்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியை வணங்கி உரையைத் தொடங்கினார். திமுக அரசின் கல்வித்துறை செயல்பாடுகளை விமர்சித்த அவர், ஆசிரியர் நியமனம் மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார்.

Ajmal Khan | Published : Apr 24 2025, 02:56 PM
2 Min read
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • Google NewsFollow Us
14
Asianet Image

Sengottaiyan vs Edappadi Palaniswami : முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக தலைவர்கள் பிரிந்து தனித்து செயல்பட்டு வருகிறார்கள், இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமியோடு திடீரென மூத்த தலைவரான செங்கோட்டையன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி பெயரை உச்சரிக்காமல் இருந்து வந்தார். எடப்பாடி படத்தையும் பொதுக்கூட்ட நிகழ்வுகளில் பெரிய அளவில் பயன்படுத்தாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று சட்டசபையில் கல்வித்துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

24
Former minister sengottaiyan

Former minister sengottaiyan

எடப்பாடியை வணங்கிய செங்கோட்டையன்

அப்போது அதிமுக சார்பாக பேசிய முன்னாள் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,  எடப்பாடியாரை வணங்கி பேச்சை தொடங்குவதாக தெரிவித்தார். திடீரென எடப்பாடி பெயரை உச்சரித்து பேசியது. அதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்லாது, ஆளுங்கட்சி மற்றும் பிற கட்சி எம்எல்ஏக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதனை தொடர்ந்து பேசிய செங்கோட்டையன்,   அதிமுக பத்தாண்டு ஆட்சிக்காலத்தில் மொத்தமாக 58 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாகவும், தற்போதைய திமுக ஆட்சியில் தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

34
Sengottaiyan

Sengottaiyan

தமிழகத்தில் கல்வி திட்டங்கள்

ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பாத திமுக ஆட்சியில் கல்விப் பணி எப்படி சிறக்கும் எனவும் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார்.  ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என வாக்குறுதியளித்த திமுக அரசு தற்போது ககன் தீப்சிங் பேடி தலைமையில் உயர்மட்டக் குழு அமைத்திருப்பதாகவும், பொறுத்திருந்து பாருங்கள் என நிதியமைச்சர் கூறியதை சுட்டிக்காட்டிய அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன், திமுகவால் அதனை செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டார். 

44
old pension scheme

old pension scheme

பழைய ஓய்வூதிய திட்டம்

ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல், அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஈட்டிய விடுப்பை வழங்காமல் தந்திரத்தோடு செயல்படும் திமுக அரசுக்கு 2026 தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும், எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும் வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே என்ற பாடலுடன் தனது உரையோடு செங்கோட்டையன் பேச்சை நிறைவு செய்தார்.

Ajmal Khan
About the Author
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார். Read More...
எடப்பாடி பழனிசாமி அதிமுக
செங்கோட்டையன்
அதிமுக பாஜக கூட்டணி
திமுக
அரசியல்
தமிழ்நாடு சட்டமன்றம்
 
Recommended Stories
Top Stories