இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தங்கம் விலை, சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

09:55 PM (IST) Nov 23
பீகாரில் பாலூட்டும் தாய்மார்களின் தாய்ப்பாலில் யுரேனியம் கலந்திருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. என்றாலும், தாய்ப்பாலின் நன்மைகள் அதிகம் என்பதால் பாலூட்டுவதை நிறுத்த வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
09:16 PM (IST) Nov 23
பெங்களூருவில், பாலியல் குறைபாடுகளுக்கு போலி ஆயுர்வேத சிகிச்சை பெற்ற சாப்ட்வேர் இஞ்சினியர் ஒருவர் ரூ.48 லட்சத்தை இழந்ததுடன், சிறுநீரக பாதிப்புக்கும் ஆளானார். மற்றொரு சம்பவத்தில், துப்பாக்கி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
08:50 PM (IST) Nov 23
08:47 PM (IST) Nov 23
WhatsApp வாட்ஸ்அப் குரூப்பில் உங்கள் பெயருக்கு அருகில் இனி 'டேக்' வைக்கலாம்! ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வரும் புதிய வசதி பற்றிய விவரங்கள்.
08:38 PM (IST) Nov 23
Oppo Reno 15C ஒப்போ ரெனோ 15C ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் கசிந்துள்ளன. 1.5K ஃபிளாட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 7 Gen 4 சிப்செட் மற்றும் 50MP கேமராவுடன் வரவுள்ளது.
08:14 PM (IST) Nov 23
MS University Exams கனமழை காரணமாக நாளை (24.11.2025) நடைபெறவிருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
07:43 PM (IST) Nov 23
முதலாவது பார்வையற்றோர் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளது. பைனலில் நேபாளத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, தொடர் முழுவதும் தோல்வியே சந்திக்காமல் மகுடம் சூடியது.
07:42 PM (IST) Nov 23
TN Technical Colleges தமிழக தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஜனவரி முதல் ஹை-டெக் கண்காணிப்பு மற்றும் புதிய டிஜிட்டல் வசதிகள் வரவுள்ளன. முழு விவரங்கள் உள்ளே.
07:30 PM (IST) Nov 23
Tirunelveli Heavy Rains கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் நாளை (24.11.2025) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
07:08 PM (IST) Nov 23
இந்தியா மீதான படையெடுப்பு காலம் முடிந்துவிட்டது, அயோத்தி ராமர் கோயிலில் கொடியேற்றும் நிலைக்கு நாடு உயர்ந்துள்ளது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். நவ 25ம் தேதி பிரதமர் மோடி ஏற்றவுள்ள இந்தக் கொடி, ராமாயணத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
06:11 PM (IST) Nov 23
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஓடிஐ தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளார்.
06:08 PM (IST) Nov 23
பெர்த் ஆஷஸ் டெஸ்ட் போட்டி இரண்டே நாட்களில் முடிந்ததால், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு டிக்கெட் விற்பனையில் சுமார் ரூ.17.35 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முன்கூட்டிய முடிவு ஏற்கனவே நஷ்டத்தில் உள்ள வாரியத்தின் நிதி நெருக்கடியை அதிகரித்துள்ளது.
05:47 PM (IST) Nov 23
Kanni Rasi Weekly Rasi Palan: நவம்பர் 10 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:36 PM (IST) Nov 23
இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் திருமணம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து பார்க்கலாம்.
05:21 PM (IST) Nov 23
Siragadikka Aasai Serial Latest Promo: ரோகிணி பற்றிய உண்மையை மறைக்க முடியாமல் மீனா வீட்டைவிட்டு வெளியேற முடிவெடுத்த நிலையில், முத்துவுடனும் பிரச்சனை வருகிறது. இதுபற்றி இந்த புரோமோவில் பார்ப்போம்.
05:12 PM (IST) Nov 23
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பாதுகாப்பு காரணங்களுக்காக கைக்குழந்தையுடன் வந்த பெண்ணை புஸ்ஸி ஆனந்த் தடுத்து நிறுத்தி, தனி அறையில் தங்க வைத்தார். இந்த மனிதாபிமான செயல் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
05:03 PM (IST) Nov 23
IND vs SA 2nd Test: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் முத்துசாமியின் அசத்தல் சதம், யான்சனின் அதிரடி ஆட்டத்தின் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 489 ரன்கள் குவித்தது.
05:00 PM (IST) Nov 23
மேற்கு வங்கத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, சுமார் 40 ஆண்டுகளாகப் பிரிந்திருந்த ஒரு குடும்பத்தை மீண்டும் இணைத்துள்ளது. தம்பியின் தொலைபேசி எண்ணுக்கு, காணாமல் போன அண்ணனின் மகன் தொடர்பு கொண்டதன் மூலம் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
04:37 PM (IST) Nov 23
Ajith Kumar Receives Gentleman Driver Award in Venice Italy: இத்தாலி வெனிஸ் நகரில் ‘ஜென்டில்மேன் டிரைவர்’ பட்டம் பெற்ற அஜித் குமாருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
04:13 PM (IST) Nov 23
Kumaravel and Kathir Fight in Pandian Stores 2 : அண்ணனை தொடர்ந்து கடைக்கு வந்த தம்பி:வேலையை காட்டிய குமரவேல் – மீண்டும் சண்டை! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்தில் கடைக்கு வந்து பழனிவேலுவுடன் சண்டை போட்ட நிலையில் இப்போது கதிர் கடைக்கு வந்துள்ளார்.
03:50 PM (IST) Nov 23
Simma Rasi Weekly Rasi Palan: நவம்பர் 10 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
03:40 PM (IST) Nov 23
உலகப் புகழ்பெற்ற திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது விசாரணையில் உறுதியாகியுள்ளது. 2019 முதல் 2024 வரை சுமார் 20 கோடி லட்டுகள், ரூ.250 கோடி மதிப்பிலான கலப்பட நெய்யில் தயாரிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
03:35 PM (IST) Nov 23
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளரை ஒருமையில் பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
03:21 PM (IST) Nov 23
Gowsalya Entry in Karthigai Deepam 2 Serial : கார்த்திகை தீபம் 2 சீரியலில் புதிய எண்ட்ரியாக விஜய் பட நடிகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.
02:55 PM (IST) Nov 23
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி மருத்துவக் கல்லூரியில், முஸ்லிம் மாணவர்கள் அதிகளவில் சேர்க்கப்பட்டதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கல்லூரி நிர்வாகம் மாணவர் சேர்க்கை தகுதி அடிப்படையிலானது எனக் கூறியுள்ளது.
02:30 PM (IST) Nov 23
Kadaga Rasi Weekly Rasi Palan: நவம்பர் 10 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
02:27 PM (IST) Nov 23
தவெகவுக்கு ஆதரவாக பேசிய திமுக எம்.எல்.ஏ பேசியதாக தவெக தலைவர் விஜய் இன்று உண்மையை போட்டுடைத்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
02:03 PM (IST) Nov 23
Vijay Promise Car is Also the Goal: சினிமாவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய தளபதி விஜய் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
02:04 PM (IST) Nov 23
தவெக தலைவர் விஜய் காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில், திமுக அரசை நேரடியாக விமர்சித்தார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் பைக் போன்ற அவரது வாக்குறுதிகளும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளன.
01:44 PM (IST) Nov 23
Mithuna Rasi Weekly Rasi Palan: நவம்பர் 10 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மிதுன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
01:21 PM (IST) Nov 23
Vijay Speech in Kanchipuram Event: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய், யார் தற்குறி, இந்த தற்குறிகள் தான் அரசியலை கேள்விகுறியாக்குவார்கள் என்று ஆவேசமாக கூறியிருக்கிறார்.
01:14 PM (IST) Nov 23
கரூரில் நடந்த சோகத்திற்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் மீண்டும் மக்கள் சந்திப்பை நடத்தினார். சுங்குவார்சத்திரத்தில் நடந்த கூட்டத்தில், அறிஞர் அண்ணாவை மேற்கோள் காட்டி, திமுக அரசை மணல் கொள்ளை போன்றவற்றை கடுமையாக விமர்சித்தார்.
12:56 PM (IST) Nov 23
நீட், பரந்தூர், என மக்களுக்கான கொள்கையோடு போராடுகிறது தவெக என்று அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார். திமுகவினர் விமர்சனத்துக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
12:50 PM (IST) Nov 23
Rishaba Rasi Weekly Rasi Palan: நவம்பர் 10 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மேஷ ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
12:46 PM (IST) Nov 23
TVK Vijay Overburst : ஒரு கட்சியே மேலிருந்து கீழே வரைக்கும் சிண்டிகேட் போட்டு கொள்ளையடிப்பதை பார்த்திருக்கிறீர்களா என்று விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
12:20 PM (IST) Nov 23
காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், தவெக தலைவர் விஜய், முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். அண்ணா, எம்ஜிஆர் போல மக்களுக்காக செயல்படுவோம் என உறுதியளித்தார்.
12:16 PM (IST) Nov 23
Mesha Rasi Weekly Rasi Palan: நவம்பர் 10 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மேஷ ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
12:06 PM (IST) Nov 23
காஞ்சிபுரத்தில் மக்களை சந்தித்து பேசி வரும் விஜய், ஒவ்வொருவருக்கும் வீடு, வண்டி, வேலை என்று வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார்.
12:05 PM (IST) Nov 23
இந்த விஜய்யை ஏன் தொட்டோம் என திமுக நினைக்கப் போகிறது? என விஜய் கடுமையாக பேசியுள்ளார். திமுக நடத்தியது அவதூறு திருவிழா என்றும் விஜய் தெரிவித்தார்.
12:00 PM (IST) Nov 23
கரூர் சம்பவத்திற்குப் பிறகு, காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். தனது உரையில், நம்ப வைத்து ஏமாற்றியவர்களை கேள்வி கேட்காமல் விடப்போவதில்லை என ஆவேசமாக பேசினார்.