- Home
- Tamil Nadu News
- இனி பிளாஸ்ட்.. பிளாஸ்ட் தான்...ஏன்டா இந்த விஜயை தொட்டோம் னு... திமுகவுக்கு விஜய் எச்சரிக்கை
இனி பிளாஸ்ட்.. பிளாஸ்ட் தான்...ஏன்டா இந்த விஜயை தொட்டோம் னு... திமுகவுக்கு விஜய் எச்சரிக்கை
இந்த விஜய்யை ஏன் தொட்டோம் என திமுக நினைக்கப் போகிறது? என விஜய் கடுமையாக பேசியுள்ளார். திமுக நடத்தியது அவதூறு திருவிழா என்றும் விஜய் தெரிவித்தார்.

திமுகவை விமர்சித்த விஜய்
கரூர் சம்பவத்துக்கு பிறகு தவெக தலைவர் விஜய் இன்று முதன்முறையாக காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் ஒரு தனியார் பொறியியல் கல்லூயில் இன்று மக்களை சந்தித்தார். சுமார் 2,000 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், திமுகவையும், திமுக அரசையும் கடுமையாக விமர்சித்தார்.
நடிகன் கூத்தாடி என விமர்சனம்
''திமுக அரசு மீது தவெக வன்மத்துடன் விமர்சனம் வைக்கவில்லை. தனிப்பட்ட முறையில் எங்களுக்கும், அவர்களுக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. அவர்கள் செய்த தவறுகளை நாம் சுட்டிக்காட்டுகிறோம். தவெகவுக்கு கொள்கை இல்லை என பேசுகிறார்கள். நடிகன், கூத்தாடி என விமர்சனம் செய்கின்றனர். நான் இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவில்லை.
விஜய்யை ஏன் தொட்டோம் என நினைப்பார்கள்?
அதற்கு விமர்சனம் செய்தால் எப்படி? குறிவைத்தால் தவற மாட்டேன். இல்லாவிடிவில் குறியே வைக்க மாட்டேன் என்று எம்.ஜி.ஆர் வசனம் பேசி இருப்பார். நம்ம குறி எப்போதும் தப்பாது. இனி பிளாஸ்ட்.. பிலாஸ்ட் தான் விஜய்யை ஏன் தொட்டோம் என நினைத்து பீல் பண்ணப் போகிறார்கள்'' என்று விஜய் கடுமையாக பேசினார்.
அறிவுத் திருவிழா என்ற பெயரில் அவதூறு திருவிழா
தொடர்ந்து திமுகவை அட்டாக் செய்த விஜய், ''அறிவுத் திருவிழா என்ற பெயரில் அவதூறு திருவிழா நடத்தியுள்ளனர். ஆனால் அந்த அறிவுத் திருவிழால் நம்மை தற்குறிகள், சங்கிகள் என அழைக்க வேண்டாம் என்று நமது கொள்கைத் தலைவர் அஞ்சலை அம்மாளின் உறவினர் (திமுக எம்.எகல்.ஏ எழிலன்) ஒருவர் சொல்லியுள்ளார்.
நம்ம கட்சியை சேர்ந்த ஒருவரே தவெகவுக்கு ஆதரவாக பேசியது என திமுக புலம்பி வருகிறது'' என்று கூறியுள்ளார்.

