ரோகிணிக்காக வீட்டைவிட்டு வெளியேறும் மீனா! முத்துவுடன் பிரச்சனை - சிறகடிக்க ஆசை அப்டேட்!
Siragadikka Aasai Serial Latest Promo: ரோகிணி பற்றிய உண்மையை மறைக்க முடியாமல் மீனா வீட்டைவிட்டு வெளியேற முடிவெடுத்த நிலையில், முத்துவுடனும் பிரச்சனை வருகிறது. இதுபற்றி இந்த புரோமோவில் பார்ப்போம்.

புதிய புரோமோ:
சின்னத்திரை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ள ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் புதிய புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. தினந்தோறும் சுவாரஸ்யமான திருப்பங்களுடன் முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தக் சீரியலில், மூலம் அனைவருக்கும் பிடித்த நடிகையாக மாறியுள்ளார் கோமதி ப்ரியா. இவர் ஏற்று நடித்து வரும், மீனா கதாபாத்திரத்துக்கும் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
சோகத்தில் மீனா:
ரோகிணியின் முன்னாள் கணவர் மற்றும் அவர்களது மகன் கிரிஷ் குறித்த உண்மை, எதிர்பாராத விதமாக மீனாவுக்கு தெரிய வருகிறது. இந்த தகவல், அவளது மனதை மட்டுமல்லாமல், இரு குடும்பங்களுக்கிடையேயான உறவுகளையும் பாதிக்கும் வகையில் இருப்பதால்... இதனை வேறு யாரிடமும் சொல்ல முடியாமல், தனக்குள் தாங்கிக் கொண்டு மீனா தவித்து வருகிறார். உண்மையை சொன்னால் குடும்பத்தில் பிரச்சனை வரும், சொல்லாமல் இருப்பதால் அவளின் மனசாட்சியே அவளை துன்புறுத்துகிறது. இதன் காரணமாகவே மீனா கதாபாத்திரம் சோகத்தில் இருப்பது போலவே காட்டப்பட்டு வருகிறது.
முத்துவுடன் சண்டை:
குறிப்பாக கணவர் முத்துவிடம் இதை மறைக்க முடியால், வீட்டை விட்டே வெளியேறி விடலாம் என முடிவு செய்கிறாள். அவளது மனநிலையைப் புரிந்து கொள்ளாதவர்கள், இதையெல்லாம் சாதாரண கோபம் எனவே நினைக்கிறார்கள். இதன் காரணமாக, குடித்துவிட்டு வீடு திரும்பிய முத்துவிடம் கூட, வேண்டுமென்றே அவள் சண்டை போடுகிறாள். இதனால் முத்துவும் மீனாவிடம் கோபித்து கொண்டு, குடிக்க போகிறேன் என கூறுகிறார்.
தவித்து போன மீனா:
இதற்கு பின், அம்மா வீட்டுக்கு மீனா செல்லும்போது அவளை தடுத்து நிறுத்தும் அண்ணாமலை “என்ன பிரச்சனை? ஏன் வீட்டை விட்டு கிளம்புற?” என்று கேட்கிறார். ஆனால் மீனாவின் மனம் உண்மையை சொல்லத் தயங்குகிறது. சொன்னால் பெரிய பிரச்சனை வெடிக்கும் என்ற பயம், குடும்பத்துக்குள் பிரச்சனை ஏற்படும் என்ற கவலை, எனவே என்ன சொல்வது என்று மீனா தவித்து நிற்கிறார்.
உண்மையை சொல்வாளா மீனா?
தன்னுடைய தந்தைக்கு நிகராக, மாமனாரை நினைக்கும் மீனா... அண்ணாமலையின் கேள்விக்கு உண்மையை சொல்வாரா? இதனால் ரோகிணி சிக்குவாரா? அல்லது மீனா தனது முடிவில் உறுதியாக இருந்து வீட்டை விட்டு வெளியேறுவாரா? என்கிற கேள்வியுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. அதே நேரம் ரோகிணியின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தாமல் மீனா இருப்பது, அவரின் கதாபாத்திரத்தை டம்மி ஆக்குவது போல் உள்ளது என சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருவதையும் பார்க்க முடிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.