- Home
- Sports
- Sports Cricket
- தாலி கட்டும் சில நிமிடங்களுக்கு முன்பு நடந்த சோகம்..! ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு!
தாலி கட்டும் சில நிமிடங்களுக்கு முன்பு நடந்த சோகம்..! ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு!
இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் திருமணம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து பார்க்கலாம்.

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்டார் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சலும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். பின்பு இருவரும் திருமண பந்தத்தில் இணைய முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா, பலாஷ் முச்சல் திருமணம் மகாராஷ்டிராவின் சாங்லியில் இன்று நடைபெற இருந்தது.
ஸ்மிருதி மந்தனா தந்தைக்கு மாரடைப்பு
சாங்கிலியில் உள்ள பண்ணை வீட்டில் இன்று அதிகாலையிலையே திருமணத்துக்கான ஏற்பாடுகள் ஜோராக நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், திருமணத்துக்கு முன்பாக ஸ்மிருதி மந்தனாவின் தந்தை சீனிவாஸுக்கு திடீரென மாரடைப்பு நடந்தது.
அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை
இதனால் ஸ்மிருதி மந்தனா, பலாஷ் முச்சலின் திருமணம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தந்தை குணமடையும் வரை திருமணம் வேண்டாம் என்று ஸ்மிருதியும், அவரது வருங்கால கணவருமான பலாஷ் முச்சல் தெரிவித்ததால் இரு வீட்டாரும் திருமணத்தை ஒத்தி வைத்துள்ளனர்.
ஸ்மிருதியும், அவரது குடும்பத்தினரும் மருத்துவனைக்கு சென்றனர். சீனிவாஸின் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
மைதானத்தில் காதலை வெளிப்படுத்திய பலாஷ் முச்சல்
முன்னதாக ஸ்மிருதி மந்தனாவும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சலும் டேட் செய்வதாக தகவல் வெளியாகி இருந்தது. பலாஷ் முச்சல், ஸ்மிருதி மந்தனாவுக்கு ப்ரொபோஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்திய மகளிர் அணி ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் வைத்து பலாஷ் முச்சல், ஸ்மிருதியிடம் தனது காதலை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தினார்.
டி.ஒய். பாட்டீல் மைதானத்தின் பிட்ச்சிற்கு ஸ்மிருதியின் கண்களைக் கட்டி கைப்பிடித்து அழைத்து வந்த பலாஷ், மைதானத்தின் நடுவில் மண்டியிட்டு தனது காதலை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

