- Home
- Sports
- Sports Cricket
- நிச்சயதார்த்தத்தை வித்தியாசமான ஸ்டைலில் அறிவித்த ஸ்மிருதி மந்தனா! மாப்பிள்ளை யார் தெரியுமா?
நிச்சயதார்த்தத்தை வித்தியாசமான ஸ்டைலில் அறிவித்த ஸ்மிருதி மந்தனா! மாப்பிள்ளை யார் தெரியுமா?
Smriti Mandhana Engaged to Palash Muchhal: இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது நிச்சயதார்த்தத்தை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

நிச்சயதார்த்தத்தை அறிவித்த ஸ்மிருதி மந்தனா
இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்டார் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது நிச்சயதார்த்தத்தை உறுதி செய்துள்ளார். தனது வாழ்க்கையின் இந்த சிறப்பு தருணத்தை பகிர்ந்து கொள்ள, அவர் மிகவும் வித்தியாசமான வழியை தேர்ந்தெடுத்துள்ளார். அவரும் மற்ற இந்திய வீராங்கனைகளும் இடம்பெற்ற இன்ஸ்டாகிராம் ரீல் மூலம் தனது நிச்சயதார்த்தத்தை அறிவித்துள்ளார் ஸ்மிருதி மந்தனா.
கரம் கோர்க்கும் ஸ்மிருதி மந்தனா, பலாஷ் முச்சல்
ஸ்மிருதி மந்தனா, பாடகர் மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சலை திருமணம் செய்ய உள்ளார். பலாஷ் முச்சல், பிரபல பாடகி பாலக் முச்சலின் சகோதரர். அவர் பகிர்ந்த ரீலில் ஸ்மிருதி மந்தனாவுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்ரேயங்கா பாட்டீல், ராதா யாதவ் மற்றும் அருந்ததி ரெட்டி ஆகியோரும் உள்ளனர்.
நிச்சயதார்த்த ரிங் காண்பித்தார்
கச்சிதமாக நடன அமைப்பு செய்யப்பட்ட இந்த வீடியோவில், 2006-ல் வெளியான 'லகே ரஹோ முன்னா பாய்' திரைப்படத்தின் 'சம்ஜோ ஹோ ஹி கயா..' பாடல் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவின் கடைசி பிரேமில், ஸ்மிருதி மந்தனா தனது மோதிர விரலில் அணிந்திருக்கும் மோதிரத்தை கேமராவிற்கு காட்டுகிறார். இதன் மூலம் நீண்டகால வதந்திகளுக்கு அதிகாரப்பூர்வ முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஏற்கனவே மறைமுமாக அறிவித்த பலாஷ்
அக்டோபரில் இந்தூரில் உள்ள ஸ்டேட் பிரஸ் கிளப்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், பலாஷ், ஸ்மிருதி உடனான தனது உறவு குறித்து குறிப்பு கொடுத்தார். அவர் அதை நேரடியாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், ஸ்மிருதி மந்தனா விரைவில் "இந்தூரின் மருமகள்" ஆகப் போகிறார் என்று வேடிக்கையாகக் கூறினார்.
உலகக்கோப்பையில் கலக்கிய ஸ்மிருதி
2025-ல் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதில் ஸ்மிருதி மந்தனாவின் ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது. அவர் ஒன்பது இன்னிங்ஸ்களில் 54.22 சராசரியில் 434 ரன்கள் எடுத்தார், இதில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியை வென்ற சதமும் அடங்கும்.
இந்த காலகட்டத்தில், மந்தனா மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் ஒரே சீசனில் இந்திய பேட்ஸ்மேன்களில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை ஆனார். 2017-ல் இங்கிலாந்தில் நடந்த தொடரில் மிதாலி ராஜின் 409 ரன்கள் சாதனையை அவர் முறியடித்தார்.

