- Home
- Cinema
- தொலைக்காட்சி
- அண்ணனை தொடர்ந்து கடைக்கு வந்த தம்பி – வேலையை காட்டிய குமரவேல் – மீண்டும் வெடித்த சண்டை!!
அண்ணனை தொடர்ந்து கடைக்கு வந்த தம்பி – வேலையை காட்டிய குமரவேல் – மீண்டும் வெடித்த சண்டை!!
Kumaravel and Kathir Fight in Pandian Stores 2 : அண்ணனை தொடர்ந்து கடைக்கு வந்த தம்பி:வேலையை காட்டிய குமரவேல் – மீண்டும் சண்டை! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்தில் கடைக்கு வந்து பழனிவேலுவுடன் சண்டை போட்ட நிலையில் இப்போது கதிர் கடைக்கு வந்துள்ளார்.

பழனிவேல் கடை ஆரம்பித்தது ஒரு குற்றமா?
பழனிவேல் கடை ஆரம்பித்தது ஒரு குற்றமா? இப்படி ஆளாளுக்கு வந்து பிரச்சனை செய்கிறீர்கள் என்று சொல்லும் அளவிற்கு முதலில் கடைக்கு வந்த செந்தில் பழனிவேலுவை மரியாதை இலலாமல் பேசியதோடு அவரது சட்டையை பிடித்து அவருடன் சண்டை போட்டார். இப்போது செந்திலைத் தொடர்ந்து கதிர் கடைக்கு வந்துள்ளார். அதைப் பற்றி பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் வம்பர் 24ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நவம்பர் 24ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையில் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை இருக்கும் அதே தெருவில் தான் இப்போது பழனிவேல் கடை ஆரம்பித்துள்ளார். எந்த தெருவில், எங்கு என்ன கடை இப்படி எதுவும் தெரியாமல் ஆரம்பிக்கப்பட்ட கடை தான் காந்திமதி ஸ்டோர்ஸ்.
காந்திமதி ஸ்டோர்ஸ்
காந்திமதி ஸ்டோர்ஸ் ஆரம்பிக்க முழு காரணமமும், சக்திவேல் மற்றும் முத்துவேல் ஆகிய இருவரையும் சேரும். தனது கடைசி தம்பி பழனிவேலுவிற்கு நல்ல செய்ய ஆரம்பிக்கப்பட்ட கடையா என்று கேட்டால் இல்லை. காரணம் பாண்டியனை பழி வாங்க ஆரம்பிக்கப்பட்ட கடை தான் இந்த காந்திமதி ஸ்டோர்ஸ். இதில் பாண்டியனிடமிருந்து பழனிவேலுவை பிரிக்க வேண்டும் என்று அண்ணன் தம்பி இருவரும் திட்டம் போட்டார்கள். அப்படி திட்டம் போட்டு இப்போது பழனிவேலுவை அவர்களிடமிருந்து பிரித்துவிட்டார்கள்.
பாண்டியன், பழனிவேலுவை வீட்டை விட்டு துரத்திவிட்டார்
இந்த நிலையில் தான் தனக்கு எதுவும் தெரியாது தெரியாது என்று சொல்லி கடைசியில் தனக்கே துரோகம் செய்துவிட்டதாக கூறி பாண்டியன், பழனிவேலுவை வீட்டை விட்டு துரத்திவிட்டார். மேலும், இத்தனை நாட்களாக தனக்கும் குடும்பத்திற்கும் சோறு போட்டது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். அப்படியிருக்கும் அந்த கடைக்கு பழனிவேல் துரோகம் செய்துவிட்டதாக பாண்டியன் ஆத்திரமடைந்தார்.
பழனிவேலுவின் கடைக்கு வந்த செந்தில்
இதைத் தொடர்ந்து பழனிவேலுவின் கடைக்கு வந்த செந்தில் என்ன நடந்தது, ஏது நடந்தது என்று கூட கேட்காமல் அவருடன் சண்டைக்கு சென்றார். செந்தில் பழனிவேல் மீது கை வைக்க, சக்திவேல் செந்தில் மீது கை வைத்தார். கடைசியில் ஆத்திரமடைந்த பழனிவேல் என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டீங்க, அப்படி இருக்கும் போது நீங்கள் எதற்கு இங்கு வரணும், இனிமேல் உங்களுக்கும் எனக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பேசினார்.
இந்த வார எபிசோடில் கடைக்கு வரும் கதிர்
ஒரு வழியாக செந்தில் அங்கிருந்து சென்றார். இந்த நிலையில் இனி இந்த வார எபிசோடில் கடைக்கு வரும் கதிர் என்ன புது முதலாளி என்று ஆரம்பிக்க அங்கிருந்து குமரவேல் கதிர் மீது கை வைத்தார். இதனை வீடியோ எடுத்த சுகன்யா ராஜீக்கு அனுப்பி விட்டார். இதைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த குமரவேல் உடன் ராஜி சண்டைக்கு சென்றார். இதையெல்லாம் பார்த்து மன வேதனை அடைந்த காந்திமதி இனிமேல் இந்த குடும்பம் ஒன்று சேராது என்று அழுது கொண்டே பேசினார். அதோடு இந்த வாரத்திற்கான புரோமோ முடிந்தது.