Vijay Speech in Kanchipuram Event: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய், யார் தற்குறி, இந்த தற்குறிகள் தான் அரசியலை கேள்விகுறியாக்குவார்கள் என்று ஆவேசமாக கூறியிருக்கிறார்.

தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து வரும் தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய் கரூர் சம்பவத்திற்கு பிறகு மக்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் தான் கிட்டத்தட்ட 55 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக மக்களை சந்தித்து ஆவேசமாக பேசியுள்ளார். அறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்கள் சந்தித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். மீண்டும் கரூர் சம்பவம் போன்று ஒரு நிகழ்வு நடந்துவிடக் கூடாது என்பதற்காக தவெக தரப்பிலிருந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

விஜய் பேச ஆரம்பிக்கும் போதே ஆவேசமாக ஆரம்பித்தார். அறிஞர் ஆரன்புத்த கட்சியை கைப்பற்றியவர்கள் என்னென்ன செய்கிறார்கள்? தனிப்பட்ட முறையில் திமுக மீது எந்த வன்மமும் இல்லை. மக்களை பொய் சொல்லி ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுகவை எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும்? நடிப்பவர்களையும் நாடகமாடுவர்களையும் கேள்வி கேட்காமல் விடப்போவதில்லை.

காஞ்சிபுரத்துக்கும் நமக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. முதல் முறையாக பிரச்சாரத்தை ஆரம்பித்தது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் தான். மக்களுக்கு ஆதரவாக திமுக ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்தோம். அப்பவே அப்படி, இவ்வளவு தூரம் நடந்ததற்கு பிறகு சும்மா விடுவோமா என்று ஆவேசமாக பேசினார்.

ஆரம்பிக்கும் முன்பே அலறினால் எப்படி? திமுக தனது கொள்கைகளை அடகு வைப்பதாக விமர்சனம் வைத்தார். விமர்சனம் செய்ய ஆரம்பிக்கும் முன்னரே அலறினால் எப்படி? என்று ஆளும் கட்சியான திமுகவை வெளுத்து வாங்கினார் தவெக தலைவர் விஜய். மேலும், தவெகவுக்கு கொள்கை இல்லை என பேசுகிறார்கள். நடிகன், கூத்தாடி என விமர்சனம் செய்கின்றனர். நான் இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவில்லை. அதற்கு விமர்சனம் செய்தால் எப்படி? குறிவைத்தால் தவற மாட்டேன். இல்லாவிடிவில் குறியே வைக்க மாட்டேன் என்று எம்.ஜி.ஆர் வசனம் பேசி இருப்பார். நம்ம குறி எப்போதும் தப்பாது. இனி பிளாஸ்ட்.. பிளாஸ்ட் தான் விஜய்யை ஏன் தொட்டோம் என நினைத்து பீல் பண்ணப் போகிறார்கள்''.

தவெக ஆட்சிக்கு வந்தால் என்ன கண்டிப்பாக வருவோம். அப்படி ஆட்சிக்கு வரும் போது ஒவ்வொருத்தருக்கும் ஒரு வீடு, ஒரு வண்டி, ஒரு வேலை. குடும்பத்திற்கு நிரந்தரமாக வருமானம் வரும்படியாக ஏற்பாடுகள் செய்யப்படும் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசினார். இந்த நிலையில் தான் ஒரு கட்சியே சிண்டிகேட் போட்டு மணல் கொள்ளையடித்தால் நீர் நிலையம் அழியும், ஏரி, கண்மாய் அழியும். இதெல்லாம் அழிந்தால் விவசாயம் அழியும். விவசாயம் அழிந்தால் விவசாயிகள் அழிந்துவிடுவார்கள். ஆக மொந்தமாக நாம் எல்லோரும் ஒரு நாள் அழிந்து போக வேண்டியது தான். இப்படி மேலிருந்து கீழ வரைக்கும் ஒரு கட்சியே சிண்டிகேட் போட்டு கொள்ளையடிப்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா மக்களே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து திமுகவை அட்டாக் செய்த விஜய், தற்குறிகள் என்று சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டு இப்போது அவர்கள் தற்குறிகள் எல்லாம் கிடையாது. யாரும் அவர்களை அப்படி சொல்லாதீர்கள் என்று ஒரு குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. யார் என்று பார்த்தால், அறிவுத்திருவிழா சாரி அவதூறு திருவிழா, அதில் அவர்களது தலைமையை குழப்புவது போன்று பேசியிருக்கிறார். அவர் தான் எம் எல் ஏ. அவர் யாரென்றால் நம்முடைய கொள்கை தலைவர்களில் ஒருவரான மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாளின் உறவினர்.

என்னடா திமுகவிலிருந்து ஒரு தவெக கட்சிக்கு ஆதரவா என்று திமுகவிலேயே குழப்பம். அந்த ஆதரவு இனி ஒவ்வொரு வீட்டிலிருந்தும், ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒவ்வொருவரிடமிருந்தும் எதிரொளிக்கும் என்று தவெக தலைவர் ஆவேசமாக பேசியுள்ளார்.