இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:17 PM (IST) Nov 24
‘‘சினிமாவை விட நிஜ வாழ்க்கையில் அவர் பெரியவர் தர்மேந்திரா. அவரது பணிவு, நேர்மை, அவரது அடையாளமான அதிரடி, நகைச்சுவை வேடங்கள் வரை, தர்மேந்திரா விட்டுச் சென்ற நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார் சக்திமான் புகழ் முகேஷ் கண்ணா.
10:52 PM (IST) Nov 24
SaReGaMaPa Tamil Here Are the 5 Contestants: ரசிகர்களின் மனம் கவர்ந்த 'சரிகமப' நிகழ்ச்சியில், டைட்டில் வென்ற 5 போட்டியாளர்கள் யார் யார் என்பது உங்களுக்கு தெரியுமா?
10:42 PM (IST) Nov 24
Adobe அடோப் போட்டோஷாப்பில் ஜெமினி 3 நானோ பனானா ப்ரோ AI இணைப்பு. டிசம்பர் 1 வரை அன்லிமிடெட் இமேஜ் ஜெனரேஷன் வசதி!
10:41 PM (IST) Nov 24
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வரும் நிலையில், அணியில் இருந்து நீக்கப்பட்ட கருண் நாயர் போட்ட சர்ச்சை ட்வீட் வைராலாகி வருகிறது.
10:31 PM (IST) Nov 24
மத்தியப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் வர்மா, இடஒதுக்கீடு மற்றும் பிராமணப் பெண்கள் குறித்து பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு பிராமண அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
10:23 PM (IST) Nov 24
Samsung Galaxy S25 சாம்சங் கேலக்ஸி S25 போனுக்கு பிளிப்கார்ட்டில் ரூ.11,000 விலை குறைப்பு! ரூ.40,000-க்கும் குறைவான விலையில் வாங்குவது எப்படி? முழு விபரம் உள்ளே.
10:22 PM (IST) Nov 24
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சூப்பர் பேட்டிங் பிட்ச்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறியது ஏன்? என்பது குறித்து வாஷிங்டன் சுந்தர் விளக்கம் அளித்துள்ளார்.
10:09 PM (IST) Nov 24
வீட்டில் திருமணம் நடப்பதால் அபசகுனம் எனக் கூறி, முதியோர் இல்லத்தில் இறந்த தாயின் உடலை மகன் ஏற்க மறுத்துள்ளார். அந்தப் பெண்மணியின் உடலை, உறவினர்கள் தற்காலிகமாகப் புதைத்து, 4 நாட்களுக்குப் பிறகு தகனம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
09:51 PM (IST) Nov 24
IMD Recruitment இந்திய வானிலை ஆய்வு மையத்தில் 134 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு. தேர்வு இல்லை, கட்டணம் இல்லை. டிசம்பர் 14க்குள் விண்ணப்பிக்கவும்.
09:40 PM (IST) Nov 24
பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைத்து, கூட்டணியைப் பலப்படுத்தி சில அதிரடி முடிவுகளுடன் தேர்தலை எதிர்க்கொள்ள பாஜக தலைமை ஆயத்தமாகி வருகிறது. அதனையொட்டி திடுக்கிடும் ட்விஸ்டுகள் இனி அடுத்தடுத்து வெளியாகலாம்’’ என்கிறார்கள்.
09:39 PM (IST) Nov 24
Thamirabarani Flood Alert தாமிரபரணியில் 16,000 கன அடி நீர் திறப்பு. நெல்லை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. ஆற்றில் இறங்கத் தடை. பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.
09:36 PM (IST) Nov 24
Actress Krithi Shetty Announces an Unexpected Dreamநடிகை கிரித்தி ஷெட்டி வெளிப்படையாக தன்னுடைய ஆசை ஒன்றை கூறிய நிலையில், உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என எச்சரித்து வருகிறார்கள் ரசிகர்கள்.
09:21 PM (IST) Nov 24
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் திடீரென பதவி விலகியதாக தகவல் பரவியது. கம்பீர் எக்ஸ் தளத்தில் இதை அறிவித்தாரா? உண்மையில் நடந்தது என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
08:51 PM (IST) Nov 24
எத்தியோப்பியாவில் உள்ள 'ஹெய்லி குப்பி' எரிமலை வெடித்ததால், அதன் சாம்பல் மேகங்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியை நோக்கி நகர்கின்றன. இதனால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி-என்.சி.ஆர் போன்ற பகுதிகளில் காற்றின் தரம் மோசமடையக்கூடும்.
08:47 PM (IST) Nov 24
Director Keerthiswaran Announces New Movie: பிரதீப் ரங்கநாதனை வைத்து 'டியூட்' படத்தை இயக்கி கவனம் பெற்ற கீர்த்திஸ்வரன், இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
08:19 PM (IST) Nov 24
தென்காசி அருகே இரு தனியார் பேருந்துகள் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணத்தொகை அறிவித்துள்ளார்.
08:04 PM (IST) Nov 24
'விக்சித் பாரத்' திட்டம் குறித்து அகிலேஷ் யாதவ் தெரிவித்த கிண்டலான கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது வாரிசு அரசியலுக்கும், பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கும் இடையிலான வேறுபாட்டை காட்டுவதாக ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.
07:57 PM (IST) Nov 24
Dharmendra body was cremated : பாலிவுட் நடிகர் தர்மேந்திரா உடல் நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்த நிலையில் சற்று முன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
07:28 PM (IST) Nov 24
தனது அப்பாவை விட சினிமாவில் தான் அதிகளவில் நேசித்த மிகப்பெரிய நடிகர் பற்றி ரோஜா மனம் திறந்து பேசியுள்ளார்.
07:19 PM (IST) Nov 24
மகளிர் கபடி உலகக் கோப்பையில் இந்திய அணி சீன தைபேயை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
07:01 PM (IST) Nov 24
Pandian Will Shut down His Shop in future : பழனிவேல் புதிதாக கடை திறந்த நிலையில் இனி வரும் காலங்களில் பாண்டியன் வியாபாரம் இல்லாமல் கடையை இழுத்து மூடி நடுத்தெருவுக்கு வரும் நிலை ஏற்படக் கூடும் என்று தெரிகிறது.
06:35 PM (IST) Nov 24
முடி உதிர்தலை தடுத்து வேகமான முடி வளர்ச்சிக்கு எந்த விதையின் எண்ணெயை எப்படி பயன்படுத்த வேண்டுமென்று இங்கு பார்க்கலாம்.
06:27 PM (IST) Nov 24
விவாஹ் பஞ்சமியை முன்னிட்டு, பிரதமர் மோடி அயோத்தி ஸ்ரீ ராம் ஜென்மபூமி கோயிலுக்குச் செல்கிறார். அங்கு அவர், கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், கோயில் சிகரத்தில் பிரமாண்ட காவிக் கொடியை ஏற்றி வைக்கிறார்.
06:14 PM (IST) Nov 24
கோவையில், மட்டும் என்ன வித்தியாசம்? யாருக்காவது வித்தியாசம் தெரிகிறதா? நான் கண்டுபிடித்து விட்டேன். உள்ளே வரும்போது நீங்கள் என் காதில் சொல்லும் போதே நான் கண்டுபிடித்து விட்டேன். கொங்கு மண்டலத்தில் யாரு இன்னைக்கு பொறுப்பாளர்?
06:12 PM (IST) Nov 24
முகத்தில் தேன் பயன்படுத்துவது நல்லதா? அப்படி பயன்படுத்தினால் என்ன ஆகும் என்பதை இங்கு பார்க்கலாம்.
06:04 PM (IST) Nov 24
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சுதர்சனம் கொலை வழக்கில் பவாரியா கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
05:52 PM (IST) Nov 24
அஜித் குமார் நடிப்பில் உருவாக இருக்கும் ஏகே64 படத்தின் படப்பிடிப்பு குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.
05:31 PM (IST) Nov 24
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்துக்கு 22க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். சென்னைக்கும் கனமழைக்கான வார்னிங் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
05:31 PM (IST) Nov 24
குளிர்காலத்தில் ஸ்வட்டர் போட்டு தூங்குவது விதமாக இருந்தாலும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் அவசியம். அவை என்னவென்று இங்கு பார்க்கலாம்.
05:29 PM (IST) Nov 24
Raji and Meena Controversial Fight : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 645ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
05:24 PM (IST) Nov 24
இந்திய கடற்படையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'ஐ.என்.எஸ் மாஹே' நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் அதிகாரபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது. 80% உள்நாட்டுப் பொருட்களுடன் உருவாக்கப்பட்ட இது, அதிநவீன ஆயுதங்களுடன் கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்தும்.
05:05 PM (IST) Nov 24
என்னை அழைத்துச் சென்று, 'அருணாச்சலம், செல்லுபடியாகும் பாஸ்போர்ட் இல்லை. அருணாச்சலம் சீனாவின் ஒரு பகுதி. உங்கள் பாஸ்போர்ட் செல்லாது" என்று விமான நிலைய அதிகாரிகள் கூறியதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
04:55 PM (IST) Nov 24
Mahat Raghavendra Transformation : பிரபல நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான மகத்தின் சமீபத்திய புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
04:46 PM (IST) Nov 24
தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இந்திய அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 314 ரன்கள் பின்தங்கியுள்ளது. 3 பேட்ஸ்மேன்கள் அடித்த தவறான ஷாட் பேட்டிங் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகி விட்டது.
04:38 PM (IST) Nov 24
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். வாக்காளர்கள் டிசம்பர் 4ம் தேதிக்குள் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.
04:16 PM (IST) Nov 24
சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை ஒரே வாரத்தில் குறைக்க எந்த மாதிரியான சைவ உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
04:12 PM (IST) Nov 24
இந்திய பைக் சந்தையில் பின்சீட் பயணிகளுக்கு அதிக சொகுசு தரும் சிறந்த குரூசர் பைக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.
04:08 PM (IST) Nov 24
பாலிவுட் திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வந்த தர்மேந்திரா இன்று காலமானார். அவரின் வியத்தகு திரைப்பயணம் பற்றியும், அவர் வாங்கிய விருதுகள் பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
04:07 PM (IST) Nov 24
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் பாகுபலி வேட்பாளர்கள் யார் யார் என்கிற உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.
04:04 PM (IST) Nov 24
Meena Rasi Weekly Rasi Palan: நவம்பர் 10 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மீன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.