2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் பாகுபலி வேட்பாளர்கள் யார் யார் என்கிற உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் ‘வெல்வோம் 200; படைப்போம் வரலாறு’ என்ற முழக்கத்தை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மேடைகள் தோறும் முழங்கி வருகிறார். அதனை நோக்கி திமுகவின் தேர்தல் பணிகள் முன்னேபோதும் இல்லாத வகையில் நடைபெற்று வருகிறது. தேர்தல் பணிகளை நீங்கள் பாருங்கள் வெற்றிபெறும் வேட்பாளர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்துள்ளார். அந்த வகையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் பாகுபலி வேட்பாளர்கள் யார் யார் என்கிற உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.
*பெரம்பலூர் தொகுதி- எஸ்.எஸ்.சிவசங்கர். *சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி- உதயநிதி ஸ்டாலின், *புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி-சி.வி.மெய்யநாதன், *நாகபட்டினம், வேதாரண்யம் தொகுதி- எஸ்.கே.வேதரத்தினம், *கள்ளக்குறிச்சி மாவட்டம்,திருக்கோவிலூர் தொகுதி- கவுதசிகாமணி, *கடலூர் மாவட்டம், கடலூர் தொகுதி -எம்.ஆர்.கே.பி.கதிரவன், *கடலூர் மாவட்டம், நெய்வேலி தொகுதி- சபா ராஜேந்திரன்.

*திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தொகுதி எம்.பி.சாமிநாதன், *நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தொகுதி- எம்.மதிவேந்தன், *கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் தொகுதி- வசந்தம் கார்த்திகேயன், *கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் தொகுதி- தா.உடயசூரியன், *திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர் தொகுதி -கு.பிச்சாண்டி *தஞ்சாவூர், திருவிடை மருதூர் தொகுதி- கோவி.செழியன், *திருப்பூர், மடத்துக்குளம் தொகுதி- ஜெயராமகிருஷ்ணன், *சிவகங்கை, திருப்பத்தூர் தொகுதி- கே.ஆர்.பெரியகருப்பன், *திண்டுக்கல், ஆத்தூர் தொகுதி- ஐ.பெரியசாமி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் தொகுதி அர.சக்கரபாணி
*நாமக்கல், குமாரபாளையம் தொகுதி எஸ்.எம்.மதுரா செந்தில், *வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதி -ஏ.பி. நந்தகுமார், *வேலூர், ஜோலார்பேட்டை தொகுதி- கே. தேவராஜு *கிருஷ்ணகிரி, பர்கூர் தொகுதி -மதியழகன் *கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதி- ஒய். பிரகாஷ், தென்காசி, சங்கரன்கோவில் தொகுதி -ராஜா, *தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி- பழனியப்பன், *கரூர் மாவட்டம் கரூர் தொகுதி -வி.செந்தில் பாலாஜி\

*மதுரை மாவட்டம் கிழக்கு- மூர்த்தி, * ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதி- ராஜ கண்ணப்பன், *தூத்துக்குடி தொகுதி -கீதா ஜீவன், *திருநெல்வேலி, ராதாபுரம்- அப்பாவு, *திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் -ஆ.பிரபாகரன், *ஈரோடு கிழக்கு தொகுதி -வி.சி.சந்திரகுமார் *காஞ்சிபுரம், ஆலந்தூர் தொகுதி- தா.மோ.அன்பரசன்
*சென்னை, அண்ணாநகர் -கார்த்திக் மோகன்,*திருவாரூர், மன்னார்குடி தொகுதி- டி.ஆர்.பி.ராஜா, *திருவண்ணாமலை தொகுதி எ.வ.வேலு, * கடலூர், திட்டக்குடி தொகுதி- சி.வி.கணேசன், *விழுப்புரம், விக்கிரவாண்டி தொகுதி -அன்னியூர் சிவா, *சென்னை, விருகம்பாக்கம் தொகுதி- தனசேகரன், சென்னை தியாகராயர் நகர் தொகுதி- ஜே.அ.ராஜா, * சென்னை துறைமுகம் தொகுதி- சிற்றரசு, சென்னை, ஆர். கே.நகர்- பி.கே. சேகர்பாபு
* சென்னை, சைதாப்பேட்டை -மா.சுப்பிரமணியன், சென்னை, மயிலாப்பூர் தொகுதி- மயிலை வேலு * சென்னை, கொளத்தூர் தொகுதி- மு.க. ஸ்டாலின், * திண்டுக்கல், பழனி தொகுதி- ஐ.பி.செந்தில்குமார், *தென்காசி தொகுதி-சிவ பத்மநாதன், * தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதி பி.ஹெச்.பி. மனோஜ் பாண்டியன், * சிவகங்கை, மானாமதுரை தொகுதி- தமிழரசி, * விருதுநகர் தொகுதி- தங்கம் தென்னரசு, *விருதுநகர், ராஜபாளையம் தொகுதி -தங்கபாண்டியன், *கன்னியாகுமரி, பத்மநாதபுரம்- மனோ தங்கராஜ் ஆகியோர் உத்தேசப்பட்டியலில் உள்ளனர்.

