- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Honey on Face : முகத்தில் தேன் தடவலாமா? தேனை சருமத்தில் பூசுவதால் என்னாகும்??
Honey on Face : முகத்தில் தேன் தடவலாமா? தேனை சருமத்தில் பூசுவதால் என்னாகும்??
முகத்தில் தேன் பயன்படுத்துவது நல்லதா? அப்படி பயன்படுத்தினால் என்ன ஆகும் என்பதை இங்கு பார்க்கலாம்.

தேன் தித்திப்பான இனிப்பு சுவையைக் கொண்டது. இது ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும். குறிப்பாக சளி முதல் தொண்டைப்புண் வரை என பல பிரச்சினைகளை குணப்படுத்த இது உதவுகிறது. மேலும் செரிமானத்தை மேம்படுத்தவும், இரவில் நன்றாக தூங்கவும் தேன் பெரிதும் உதவுகிறது.
தேன் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். ஆம், பல வழிகளில் தேன் முகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. தேனின் சிறப்பு என்னவென்றால், அது முகத்தில் எந்தவித தீங்கையும் விளைவிக்காது.
தேனில் நிறைந்திருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஃப்ரீரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும் இது சருமத்தில் கொலோஜன் உற்பத்தியை அதிகரிக்க செய்யும். இதன் விளைவாக சருமம் இறுக்கமாகி, இளமையாகவும், பிரகாசமாகவும் மாறும்.
வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு தேன் மிகவும் நன்மை பயருக்கும். மேலும் இது சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றி, சருமத்தை பளபளபாக்குகின்றன.
தேன் சருமத்தில் இருக்கும் பாக்டீரியாக்களை பெருமளவில் குறைத்து, முகப்பருக்கள் வருவதை தடுக்கிறது. எனவே முகப்பரு பிரச்சினைகயால் அவதிப்படுபவர்களுக்கு தேன் பெஸ்ட் சாய்ஸ்.
யாரெல்லாம் முகத்தில் தேன் பயன்படுத்தக் கூடாது?
- தேன் ஒவ்வாமை உள்ளவர்கள் தேனை முகத்தில் பயன்படுத்தினால் சருமத்தில் எரிச்சல் அல்லது ஒவ்வாமை எதிர்வினையை ஏற்படுத்தும்.
- தேன் பருக்களை குறைக்கும் என்றாலும், பருக்கள் மீது தேனை நீண்ட நேரம் வைத்தால் அது சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும்.
- அதிகப்படியான முகப்பருக்கள், தடிப்பு, தோல் அலர்ஜி அல்லது வேறு ஏதேனும் மோசமான தோல் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் முகத்தில் தேன் பயன்படுத்த வேண்டாம்.

