- Home
- Lifestyle
- Winter Sleep Tips : குளிருக்கு இதமா ஸ்வெட்டர் போட்டு தூங்குறீங்களா? அப்ப இதை முதல்ல தெரிஞ்சுக்கங்க!!
Winter Sleep Tips : குளிருக்கு இதமா ஸ்வெட்டர் போட்டு தூங்குறீங்களா? அப்ப இதை முதல்ல தெரிஞ்சுக்கங்க!!
குளிர்காலத்தில் ஸ்வட்டர் போட்டு தூங்குவது விதமாக இருந்தாலும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் அவசியம். அவை என்னவென்று இங்கு பார்க்கலாம்.

நம்மில் பெரும்பாலானோர் குளிர்காலத்தில் தூங்கும் போது ஸ்வெட்டர், சாக்ஸ் அணிந்து தூங்குவார்கள். அது சூடாகவும், வசதியாகவும் நம்மை வைத்திருக்கும். மேலும் தூங்கும் போது நல்ல அரவணைப்பையும் வழங்கும். ஆனால் அதற்கு முன் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என்கின்றனர் நிபுணர்கள். அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.
குளிர்காலத்தில் இரவு தூங்கும் போது ஸ்வெட்டர், சாக்ஸ் அணிந்து தூங்குவது உடலை சூடாக வைத்திருக்கும். ஆனால் நீங்கள் பயன்படுத்தும் ஸ்வெட்டர் இறுக்கமாக இருக்கக் கூடாது. இல்லையெனில் உடலில் அழுத்தத்தை ஏற்படுத்தி, இரத்த ஓட்டத்தில் தலையிட்டு தூக்கத்தை சீர்குளித்து விடும். எனவே எப்போதும் தளர்வான ஸ்வெட்டர்களை மட்டுமே அணியவும்.
அதுபோல நீங்கள் பயன்படுத்தும் ஸ்வெட்டர் சுத்தமாகவும், உலர்ந்ததாகவும் மற்றும் சுவாசிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். ஸ்வெட்டர் பழையதாக அல்லது அழுக்காக தூசியாக இருந்தால் அது சருமத்தில் அரிப்பு, தடிப்பு மற்றும் எரிச்சடை ஏற்படுத்தும்.
குளிர்காலத்தில் சாக்ஸ் அணிந்து தூங்குவது செளகரியமாக இருக்கும். குறிப்பாக அவை கால்களை சூடாக வைத்திருக்கும். இதனால் தூக்கத்தின் தரம் மேம்படும். ஆனால் நீங்கள் அணியும் சாக்ஸ் சரியானதாக இருப்பது மிகவும் அவசியம். அதாவது, ரத்த ஓட்டத்தை தடுக்காத தளர்வான அல்லது நீண்ட சாக்ஸ்களை அணியவும்.
முக்கியமான நீங்கள் அணியும் சாக்ஸ் சுத்தமானதாக இருக்க வேண்டும். அழுக்கான சாக்ஸ் அணிந்தால் கால்களில் தொற்று மற்றும் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கும்.
ஒருவேளை உங்களுக்கு ஸ்வெட்டர் பயன்படுத்த பிடிக்கவில்லை என்றால், குளிருக்கு இதமான ஆடைகளை அணியுங்கள். ஆனால் அவை வியர்வையை உறிஞ்சும் வகையில் இருக்க வேண்டும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

