- Home
- Lifestyle
- Blood Sugar Level : ஒரே வாரத்தில் சர்க்கரை நோயை குறைக்கும் சைவ உணவுகள்! எந்த உணவுகள் தெரியுமா?
Blood Sugar Level : ஒரே வாரத்தில் சர்க்கரை நோயை குறைக்கும் சைவ உணவுகள்! எந்த உணவுகள் தெரியுமா?
சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை ஒரே வாரத்தில் குறைக்க எந்த மாதிரியான சைவ உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

Vegetarian Foods To Reduce Blood Sugar
இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறையால் சர்க்கரை நோய் மக்கள் மத்தியில் பொதுவாகிவிட்டது. சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது ரொம்பவே முக்கியம். இதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் வருகின்றனர். அவற்றில் ஒன்றுதான் உணவு பழக்கம். எனவே, உங்களது உடலில் இரத்த சர்க்கரை அளவை ஒரே வாரத்தில் குறைக்க உதவும் சில சைவ உணவுகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
காளான்
இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க இது உதவுகிறது. இதில் ஆக்சிஜனேற்றிகள் அதிகமாகவும், கார்போஹைட்ரேட்கள் குறைவாகவும் உள்ளன. இவை இன்சுலின் எதிர்ப்புடன் தொடர்புடைய வீக்கத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் இதை சாண்ட்விச் அல்லது சூப்பாக சாப்பிடலாம்.
காலிஃபிளவர்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் காலிஃப்ளவரை விரும்பி சாப்பிடுவர். இதில் நார்ச்சத்து அதிகமாகவும், கிளைசெமிக் குறியீட்டெண் குறைவாகவும் உள்ளன. இவை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும், வீக்கத்தையும் குறைக்கும் மற்றும் இன்சுலின் செயல்பாட்டை ஆதரிக்கும்.
பார்லி
முழு தானியமான இது இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து இரத்த சர்க்கரை திடீர் உயர்வதை தடுக்க உதவுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் இதை பிற காய்களுடன் கிச்சடி அல்லது கஞ்சி போல செய்து சாப்பிடலாம்.
வெண்டைக்காய்
இதில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளன. இது இரத்த சர்க்கரை புரிஞ்சுதலை மெதுவாக்கும். எனவே டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு இது ரொம்பவே நல்லது. ஆகவே சர்க்கரை நோயாளிகள் தினமும் காலை வெறும் வயிற்றில் வெண்டைக்காய் நீர் குடித்து வரலாம்.
டோஃபு
இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க இது உதவுகிறது. இதில் புரதச்சத்து அதிகமாகவும், கிளைசெமிக் குறையீடு குறைவாகவும் உள்ளன. எனவே, சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். இதை சூப்கள் அல்லது பிற காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
விதைகள்
சூரியகாந்தி விதைகள், ஆளிவிதைகள், சியா விதைகள், பூசணி விதைகள் போன்ற விதைகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடென்ட்கள் இவற்றில் அதிக அளவில் உள்ளன. எனவே இரத்த சர்க்கரை உள்ளவர்கள் இதை தாராளமாக சாப்பிடலாம். இந்த விதைகளை சாலட் மீது தூவி சாப்பிடலாம் அல்லது வறுத்து அப்படியே மென்று சாப்பிடலாம்.
அவகேடோ
வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் இதில் நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இவை செரிமானத்தை மெதுவாக்கி இரத்த சர்க்கரை அளவை நிலையாக வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக இதில் இருக்கும் மோனோச்சுரேட்டட் கொழுப்புகள் இன்சுலின் இணைதிறனை மேம்படுத்த உதவுவதாக கண்டறிந்துள்ளன.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

