MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • இந்திய அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பதவி விலகல்?.. அதிரடி அறிவிப்பு.. கடைசியில் ட்விஸ்ட்! Fact Check

இந்திய அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பதவி விலகல்?.. அதிரடி அறிவிப்பு.. கடைசியில் ட்விஸ்ட்! Fact Check

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் திடீரென பதவி விலகியதாக தகவல் பரவியது. கம்பீர் எக்ஸ் தளத்தில் இதை அறிவித்தாரா? உண்மையில் நடந்தது என்ன? என்பது குறித்து விரிவாக‌ பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Nov 24 2025, 09:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இந்திய அணியின் மோசமான ஆட்டம்
Image Credit : Getty

இந்திய அணியின் மோசமான ஆட்டம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 489 ரன்கள் குவித்த நிலையில் இந்திய அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி கிட்டத்தட்ட தோல்வியின் பாதையில் சென்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 124 என்ற இலக்கை கூட எட்ட முடியாமல் 93 ரன்னில் சுருண்டு 30 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி இந்த தொடரையும் கிட்டத்தட்ட பறிகொடுத்து விட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
கம்பீர் தலைமையில் படுமோசம்
Image Credit : Getty

கம்பீர் தலைமையில் படுமோசம்

சொந்த மண்னில் இந்திய அணியின் மோசமான செயல்பாடுகளை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அதுவும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலைமையில் இந்திய அணி சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் நியூசிலாந்திடம் 3-0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. 

ஆஸ்திரேலியா சென்று அங்கும் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை 3-1 என்ற கணக்கில் இழந்தது. இதனால் கம்பீர் பதவி விலக வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

34
கம்பீர் திடீர் பதவி விலகல்?
Image Credit : Getty

கம்பீர் திடீர் பதவி விலகல்?

இந்த நிலையில், இந்திய அணி பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக கவுதம் கம்பீர் எக்ஸ் தளத்தில் அறிவித்ததாக ஜெட் வேகத்தில் தகவல் பரவியது. அதாவது கவுதம் கம்பீர் பெயரில் வெளியான அந்த அறிக்கையில், ''இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் விமர்சனங்கள், ட்ரோலிங் என்னை சோர்வாக்கி விட்டது.

அணிக்காக நான் அனைத்தையும் கொடுத்தேன். இப்போது எனது சாதனைகள் அப்படியே இருக்கவும், தலை நிமிர்ந்து நிற்கவும் நான் புறப்படுகிறேன். இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்'' என குறிப்பிட்டு இருந்ததால் கம்பீர் ராஜினாமா செய்து விட்டதாக பலரும் நினைத்தனர்.

44
கம்பீர் பெயரில் போலி அக்கவுண்ட்
Image Credit : x

கம்பீர் பெயரில் போலி அக்கவுண்ட்

ஆனால் எக்ஸ் தளத்தில் கவுதம் கம்பீர் பெயரில் வெளியான அந்த அக்கவுண்ட் போலியானது என்பது பின்னர் தெரியவந்தது. அதாவது கம்பீர் பெயரில் போலியான கணக்கு தொடங்கி அவர் வெளியிட்டதாக அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். ஆனால் கம்பீரின் உண்மையான எக்ஸ் கணக்கு வேறு. தனது உண்மையான எக்ஸ் அக்கவுண்ட்டில் கம்பீர் கடைசியாக கடந்த 21ம் தேதி தான் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

உண்மையான அக்கவுண்டில் எந்த பதிவும் இல்லை

அதன்பிறகு இப்போது வரை அவர் எந்த பதிவும் வெளியிடவில்லை. இதன்மூலம் கம்பீரின் பெயரில் போலி எக்ஸ் கணக்கு தொடங்கி அவர் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்று விட்டதாக தவறான தகவலை பரப்பியுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது. ஆனாலும் இந்திய அணியின் நலன் கருதி இந்த பதிவு உண்மையாக இருக்கக் கூடாதா? என கம்பீரை விமர்சிப்பவர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
டாஸ் வென்றும் இந்தியாவுக்கு பேரிடி! ஹோப்பின் சதம், சாம்சனின் போராட்டம்... தோல்விக்கான 3 காரணங்கள்!
Recommended image2
டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் வெள்ளை டிரஸ் ஏன்? இந்த சுவாரஸ்யமான வரலாறு தெரியுமா?
Recommended image3
IND vs WI 4th T20: 2 அதிரடி மாற்றம்.. வைபவ் சூர்யவன்ஷி கம்பேக்.. சிக்சர் மன்னனுக்கு இடமில்லை.. பிளேயிங் லெவன்!
Related Stories
Recommended image1
இந்தியா தோல்விக்கு கம்பீர் தான் காரணம்..! இப்படி ஒரு மோசமான பயிற்சியாளரா? முன்னாள் வீரர்கள் ஆவேசம்!
Recommended image2
IND vs SA: இந்திய அணி 201 ரன்னில் சுருண்டது.. படுமோசமான பேட்டிங்.. இந்த 3 வீரர்கள் தான் மெயின் காரணம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved