- Home
- Sports
- Sports Cricket
- இந்தியா தோல்விக்கு கம்பீர் தான் காரணம்..! இப்படி ஒரு மோசமான பயிற்சியாளரா? முன்னாள் வீரர்கள் ஆவேசம்!
இந்தியா தோல்விக்கு கம்பீர் தான் காரணம்..! இப்படி ஒரு மோசமான பயிற்சியாளரா? முன்னாள் வீரர்கள் ஆவேசம்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு கவுதம் கம்பீரே காரணம் என முன்னாள் வீரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பிட்ச் தேர்வு சரியாக இருக்க வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.

இந்திய அணி படுதோல்வி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பியது தோல்விக்கு முக்கிய காரணமாகி விட்டது. மேலும் போட்டி நடந்த கொல்கத்தாவின் ஈடன் கார்டன் பிட்ச் முழுக்க முழுக்க ஸ்பினுக்கு உகந்ததாக இருந்தது.
டர்னிங் பிட்ச் கேட்ட கம்பீர்
அதாவது 2வது நாளில் இருந்தே பந்து சுழன்று திரும்பியதால் பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்க சிரமப்பட்டனர். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் இந்த டர்னிங் டிராக் பிட்ச்சை அமைக்க சொன்னார். இந்த பேட்ச் மோசமான பிட்ச் கிடையாது. பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடவில்லை என அவர் குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில், கொல்கத்தாவில் தோல்வியை சந்தித்ததால் பிசிசிஐ மீதும், கவுதம் கம்பீர் மீதும் முன்னாள் வீரர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
முன்னாள் வீரர்கள் விமர்சனம்
சவுரவ் கங்குலி, கே. ஸ்ரீகாந்த், ஹர்பஜன் சிங், சேதேஷ்வர் புஜாரா ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளனர். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்து இந்தியா தனக்குத்தானே வலையில் சிக்கிக்கொண்டதாகவும், தொடர் தவறுகளில் இருந்து இந்தியா பாடம் கற்கவில்லை என்றும் தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவரான கே. ஸ்ரீகாந்த் கூறினார்.
இரு அணிகளாலும் 200 ரன்களைக் கூட எடுக்க முடியவில்லை. பந்துவீசத் தெரியாதவர்கள்கூட இந்த ஆடுகளத்தில் விக்கெட் எடுப்பார்கள்.இந்த ஆடுகளத்தை எப்படி நல்லது என்று சொல்ல முடியும் என ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பினார்.
டெஸ்ட் கிரிக்கெட்டைக் கொல்கிறது
முதல் நாளிலிருந்தே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்தை உருவாக்குவதன் மூலம் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டைக் கொல்கிறது என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இந்த ஆடுகளத்தில் விக்கெட் எடுப்பதை ஒரு சாதனையாகக் கருத முடியாது. ஆடுகளம்தான் விக்கெட்டை எடுக்கிறது. பேட்ஸ்மேன் அல்லது பந்துவீச்சாளரின் திறமையை சோதிக்காத ஒரு போட்டியால் யாருக்கு என்ன பயன் என்றும் அவர் கூறினார்.
கம்பீருக்கு கங்குலி அட்வைஸ்
சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தும் இவ்வளவு மோசமாக தோற்றதற்கு அணி நிர்வாகமே பொறுப்பு என்று சேதேஷ்வர் புஜாரா தெரிவித்துள்ளார். ஆனால், அணித் தேர்வில் உள்ள குறைபாட்டை சவுரவ் கங்குலி சுட்டிக்காட்டினார்.
சுழற்பந்து வீச்சாளர்களுடன் பும்ரா, சிராஜ், முகமது ஷமி ஆகிய வேகப்பந்து வீச்சு கூட்டணியின் மீதும் பயிற்சியாளர் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும். ஷமி டெஸ்ட் அணியில் இல்லாதது ஆச்சரியமாக இருக்கிறது. சுழற்பந்து வீச்சு ஆடுகளத்தை தயார் செய்யும்போது ஸ்கோர் போர்டில் ரன்கள் இருக்காது. ஐந்தாவது நாள் வரை ஆட்டம் செல்ல வேண்டும் என்று கங்குலி கூறியுள்ளார்.