- Home
- Sports
- Sports Cricket
- IND vs SA 1st Test: இந்திய அணி தோல்விக்கு 'இந்த' 2 வீரர்கள் தான் காரணம்..! ரிஷப் பண்ட் வேதனை!
IND vs SA 1st Test: இந்திய அணி தோல்விக்கு 'இந்த' 2 வீரர்கள் தான் காரணம்..! ரிஷப் பண்ட் வேதனை!
IND vs SA 1st Test: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான தோல்வி குறித்து இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரிஷப் பண்ட் விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய அணி மோசமான தோல்வி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது. 124 என்ற குறைந்த இலங்கை துரத்திய இந்திய அணி 2வது இன்னிங்சில் 93 ரன்களுக்கு சுருண்டது. 2010-க்குப் பிறகு, 15 ஆண்டுகளில் இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்கா தனது முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ரிஷப் பண்ட் சொன்ன காரணம்
தோல்விக்குப் பிறகு, இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரிஷப் பண்ட் அணி வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும், இந்த இலக்கை எட்டியிருக்க வேண்டும் என்றும் கூறினார்.
ஆட்டம் முடிந்த பிறகு பேசிய ரிஷப் பண்ட், ''இதுபோன்ற ஒரு ஆட்டத்திற்குப் பிறகு, அதைப் பற்றி அதிகம் யோசிக்க முடியாது. நாங்கள் இதை சேஸ் செய்திருக்க வேண்டும். அழுத்தம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்தது. நாங்கள் வாய்ப்புகளைப் போதுமான அளவு பயன்படுத்திக் கொள்ளவில்லை.
பவுமா, போஷ் பார்ட்னர்ஷிப்
காலையில் டெம்பா பவுமாவும் போஷும் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். அது எங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது. விக்கெட்டிலிருந்து பந்துவீச்சுக்கு நல்ல ஒத்துழைப்பு இருந்தது. இதுபோன்ற ஆடுகளங்களில் 120 ரன்கள் என்பது கடினமான இலக்குதான்.
ஆனாலும், நாங்கள் அழுத்தத்தைச் சமாளித்து வாய்ப்புகளைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். முன்னேற்றம் குறித்து நாங்கள் இன்னும் சிந்திக்கவில்லை, ஆனால் நிச்சயமாக வலுவாகத் திரும்புவோம்" என்று தெரிவித்துள்ளார்.
பவுமா சொன்னது என்ன?
இந்தியாவுக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்குப் பிறகு, தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா, அரைசதம் அடித்ததுடன், அக்சர் படேலின் முக்கியமான கேட்ச்சை பிடித்தது குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய பவுமா, ''இதுபோன்ற போட்டிகளின் ஒரு பகுதியாக இருக்கவே நீங்கள் விரும்புவீர்கள், குறிப்பாக வெற்றிப் பக்கத்தில் இருக்கும்போது. எங்களால் முடிந்தவரை களத்தில் உறுதியாக நிற்க முயற்சித்தோம். பேட்டிங்கில் இது கடினமாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும்; அது எங்களுக்குக் கடினமாக இருந்தது.
இந்த பார்னர்ஷிப் தான் முக்கியம்
ஆனால் கிடைத்த வாய்ப்புகளை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. எங்கள் வீரர்கள் அதை அழகாகச் செய்தார்கள். அதிர்ஷ்டவசமாக, விஷயங்கள் நன்றாகவே அமைந்தன. எங்கள் பந்துவீச்சாளர்கள் எங்களை மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டு வந்தனர்.
ஆனால், போஷ் உடனான பார்ட்னர்ஷிப், இறுதியில் மார்கோவுடனும் சிறிது நேரம் ஆடியது. இன்று காலை நாங்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக விளையாட ஒரு உத்வேகத்தை அளித்தது'' என்றார்.