- Home
- Sports
- Sports Cricket
- 3வது நாளில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்! அதிசயம் நிகழ்த்திய SA பவுலர்கள்! முதல் டெஸ்ட்டில் இந்தியா படுதோல்வி!
3வது நாளில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்! அதிசயம் நிகழ்த்திய SA பவுலர்கள்! முதல் டெஸ்ட்டில் இந்தியா படுதோல்வி!
சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட்டில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. அந்த அணி இந்தியாவுக்கு எதிராக 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது. 124 என்ற குறைந்த இலங்கை துரத்திய இந்திய அணி அதைக்கூட எட்டிப்பிடிக்க முடியாமல் வெறும் 93 ரன்களில் சுருண்டு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
டெம்பா பவுமாவின் மேஜிக் இன்னிங்ஸ்
இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்பு 2வது இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 93/7 என்ற நிலையில் இருந்தது. இன்று 3ம் நாள் தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா சிறப்பாக விளையாடி 55 ரன் அடித்தார். கார்பின் போஷ் முக்கியமான 25 ரன் எடுத்தார்.
இந்திய அணி தடுமாற்றம்
இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 30 ஓவரில் 50 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். குல்தீப் யாதவ், முகமது சிராஜ் தலா விக்கெட்டுகளையும், பும்ரா, அக்சர் படேல் தலா ஒரு விக்கெட்டும் சாய்த்தனர். எளிய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த இந்திய அணி ஜெய்ஸ்வால் (0), கே.எல்.ராகுல் (1) என 1 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. இருவரையும் தனது அபார பந்துவீச்சால் மார்கோ யான்சென் காலி செய்தார்.
ரிஷப் பண்ட் ஏமாற்றம்
இதன்பிறகு ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தரும், துருவ் ஜூரலும் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஸ்கோர் 33 ஆக உயர்ந்தபோது ஷாட் பாலில் தேவையில்லாத ஷாட் அடித்த துருவ் ஜூரல் (13) கேட்ச் ஆனார். பின்பு வந்த பொறுப்பு கேப்டன் ரிஷப் பண்ட் தொடக்கம் முதலே தடுமாறி சைமன் ஹார்மர் பந்தில் கேட்ச் ஆனார். அப்போது இந்திய அணி 38/4 என தடுமாறியது.
சைமன் ஹார்மர் சூப்பர் பவுலிங்
ஒருமுனையில் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் வாஷிங்டன் சுந்தர் பொறுமையாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா பொறுப்பாக விளையாடினார். நன்றாக விளையாடிய ஜடேஜா 18 ரன்னில் ஹார்மர் பந்தில் எல்பிட பிள்யூ ஆனார். இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாகும். இதன்பிறகு சூப்பராக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் (31 ரன்) மார்க்ரம் பந்தில் காலியானார். குல்தீப்பும் (1) ஹார்மர் பந்தில் வெளியேறினார்.
தென்னாப்பிரிக்கா அணி வரலாற்று சாதனை
மறுபக்கம் அக்சர் படேல் கேசவ் மகாராஜின் ஓவரில் தொடர்ந்து 1 பவுண்டரி, 2 சிக்சர்கள் விளாசியதால் ரசிகர்கள் குஷியானார்கள். ஆனால் அடுத்த பந்திலேயே அக்சர் படேல் (26) மகாராஜ் பந்தில் கேட்ச் ஆனார். தொடர்ந்து சிராஜும் (0) அதற்கு அடுத்த பந்தில் அவுட் ஆக இந்திய அணி 93 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் இந்திய மண்ணில் அந்த அணி டெஸ்ட்டில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. தென்னாபிரிக்கா தரப்பில் சைமன் ஹார்மர் 4 விக்கெட்டுகளையும், மார்கோ யான்சன் 3 விக்கெட்டுகளைவும் வீத்தினார்கள்.