தளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் பட பாணியில்... அடுத்த படத்தை இயக்கும் கீர்த்திஸ்வரன்!
Director Keerthiswaran Announces New Movie: பிரதீப் ரங்கநாதனை வைத்து 'டியூட்' படத்தை இயக்கி கவனம் பெற்ற கீர்த்திஸ்வரன், இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

டியூட் பட இயக்குனர் கீர்த்தீஸ்வரன்:
பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ படத்தை இயக்கிய கீர்த்தீஸ்வரன், தனது முதல் முயற்சியிலேயே தமிழ் சினிமாவில் கவனத்தை ஈர்த்தவர். இளைய தலைமுறை சினிமா ரசிகர்களை குறிவைத்து உருவாக்கப்பட்ட இந்தப்படம், வெளியானபோது விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தாலும், இளைஞர்களிடையே வேகமாக பேசுபொருளாக மாறியது. குறிப்பாக பாடல்கள், பிரேம் சீன்கள் மற்றும் கேரக்டர்கள் சமூக வலைதளங்களில் மீம்களாக பரவியதால், இப்படம் ஓரளவிற்கு “யூத் கனெக்ஷன்” பெற்றது. இதன் விளைவாக, ‘டியூட்’ படத்தின் வசூல் பலருக்கும் ஆச்சர்யமளிக்கும் வகையில் முன்னேறி, இறுதியில் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
கில்லி பாணியில் இரண்டாவது படம்:
இந்த வெற்றியின் பின்னர், கீர்த்தீஸ்வரன் தனது இரண்டாவது திரைப்படம் குறித்து ரசிகர்களிடமும், தொழில்துறையிலும் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கினார். சமீபத்தில் நடந்து முடிந்த ஒரு நிகழ்ச்சியில், தனது அடுத்த படத்தின் பாணி குறித்து அவர் பேசினார். தமிழ் சினிமாவின் கிளாசிக் ஆக்ஷன் - காதல் கலவையை எடுத்துக்காட்டும் படங்களில் ஒன்று “கில்லி”. தரணி இயக்கத்தில், விஜய் மற்றும் த்ரிஷா நடித்த இந்த படம், வெளிவந்த நாளிலிருந்தே பெரிய வெற்றியை மட்டுமன்றி, தமிழ் மக்களின் மனதில் இன்றுவரை அழிக்கமுடியாத ஒரு இடத்தை பிடித்துள்ளது. அதிரடி காட்சிகள், நகைச்சுவை, காதல், குடும்ப உணர்வு போன்ற அனைத்தும் இடம்பெற்றிருந்தது இந்த படத்தின் தனி சிறப்பு எனலாம்.
வேகமான கதை களம்:
அந்த படத்தின் தாக்கம் தான் தன்னை மிகவும் ஈர்த்ததாக கூறியுள்ள கீர்த்திஸ்வரன். “எனது இரண்டாவது படத்தை ‘கில்லி’யின் பாணியில் உருவாக்க நினைக்கிறேன். அந்தப் படத்தில் இருந்த அதிரடி, காதல், மோதல், அதே சமயம் எளிமையான மற்றும் வேகமான கதை களம் என, இடம்பெறும் அனைத்து விஷயங்களும் இன்றைய தலைமுறையை ரசிக்க வைக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.
கில்லி' படத்தின் முதுகெலும்பு:
அவர் மேலும் கூறுகையில், தரணியின் எழுத்து பாணி மற்றும் காட்சிகளை காட்டும் விதம் போன்ற அம்சங்கள்எப்போதும் தன்னை ஊக்குவித்ததாகவும், குறிப்பாக விஜய் - பிரகாஷ் ராஜ் இடையிலான மோதல் 'கில்லி' படத்தின் முதுகெலும்பு எனவும் பாராட்டினார். “ அந்த அளவுக்கு அது ஒரு ‘மாஸ் கிளாசிக்’. அப்படிப்பட்ட ஒரு படத்தை , இன்றைய காதல் - கோபம் கலந்த மோதலை மையமாகக் கொண்டு ஒரு வேகமான கதை அமைக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
அதிகரிக்கும் ஆர்வம்:
இந்நிலையில், அவரது புதிய படத்தின் கதாநாயகன் யார், கதாநாயகி யார், எப்போது படப்பிடிப்பு பணிகள் துவங்கும் என்பது போன்ற விவரங்கள் தற்போது வரை வெளியாகவில்லை. 'டியூட்' படத்தின் மூலம், இளம் ரசிகர்களை கவர்ந்த கீர்த்திஸ்வரின், இரண்டாவது திரைப்படமும் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் என்பது இவரது பேச்சு மூலமே தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.