- Home
- Tamil Nadu News
- 22 மாவட்டங்களில் அடிச்சு துவம்சம் பண்ணப்போகும் கனமழை! சென்னைக்கும் வார்னிங்! வானிலை அப்டேட்!
22 மாவட்டங்களில் அடிச்சு துவம்சம் பண்ணப்போகும் கனமழை! சென்னைக்கும் வார்னிங்! வானிலை அப்டேட்!
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்துக்கு 22க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். சென்னைக்கும் கனமழைக்கான வார்னிங் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்கிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓயாமல் மழை கொட்டித் தீர்த்தது.
இதனால் இந்த மூன்று மாவட்டங்களிலும் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்தில் 20 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று எங்கெங்கு கனமழை?
24ம் தேதியான இன்று திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நெல்லை, தூத்துக்குடி
25ம் தேதி (நாளை) முதல் 27ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்
28ம் தேதி முதல் 30ம் தேதி வரை கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னைக்கும் கனமழை வார்னிங்
இதேபோல் மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழையும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (24-11-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

