- Home
- Tamil Nadu News
- இது மட்டும் நடந்துடுச்சுன்னா! தமிழகத்தில் மழை சக்க போடு போடும்! வெதர்மேன் முக்கிய அப்டேட்
இது மட்டும் நடந்துடுச்சுன்னா! தமிழகத்தில் மழை சக்க போடு போடும்! வெதர்மேன் முக்கிய அப்டேட்
இலங்கைக்கு அருகே உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குமரிக்கடலை நோக்கி நகர்வதால், தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது. டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16ம் தொடங்கியது. அன்று முதல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் ஏரி, குளங்கள் மற்றும் நீர் நிலைகளின் நீர் மட்டங்கள் உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து வெயில் வாட்டி வதைத்து வந்தது. மழையின் தாக்கமும் குறைந்து அவ்வப்போது ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் நாட்களில் மழையின் தாக்கம் எப்படி இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: இலங்கைக்கு அருகிலுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி குமரி கடலை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நகரும் பட்சத்தில் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு மழையை எதிர்பார்க்கலாம். கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பதிவாகியுள்ளது. டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் திடீரென மழை பெய்யும். புயல் சின்னத்தை பொறுத்தவரை, டிசம்பர் மாதத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. புயல் உருவாக இன்னும் 8 முதல் 9 நாட்கள் இருக்கிறது. புயலின் போக்கை அறிய, இன்னும் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது குமரி கடலை நோக்கி நகர்ந்தால், தமிழகத்தில் மழைக்கு பரவலாக வாய்ப்பு இருக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் விட்டு விட்டு மழை பெய்யும். இடைவிடாமல் மழை பெய்யும். எனவே, மத்திய, தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.
டெல்டா மாவட்டங்களில் மழை
டெல்டா மாவட்டங்களில் மயிலாடுதுறை, திருவாரூர், நாகை சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல் தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி மாவட்டத்தின் சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக நெல்லையின் மாஞ்சோலை பகுதியில் அதி கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

