MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தோழர் நல்லக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு..! மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு

தோழர் நல்லக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு..! மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு

சுதந்திரப் போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லக்கண்ணு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

1 Min read
Author : Velmurugan s
Published : Feb 24 2026, 10:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
நல்லக்கண்ணுவுக்கு செயற்கை சுவாசம்
Image Credit : our own

நல்லக்கண்ணுவுக்கு செயற்கை சுவாசம்

சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லக்கண்ணு கடந்த சில தினங்களாக வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மூச்சுத் திணறல், நுரையீரல் தொற்று காரணமாக அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

23
நல்லக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு
Image Credit : google

நல்லக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நல்லக்கண்ணுவை முதல்வர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். கடந்த சுமார் 20 நாட்களாக அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில் தற்போது அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Related image1
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்... வைகோ, நல்லக்கண்ணு, பிரேமலதா மீதான வழக்குகள் ரத்து... தமிழக அரசு அதிரடி...!
Related image2
37,500 ஏரிகளில், 5,000 ஏரிகள் காணவில்லை... பகீர் கிளப்பும் நல்லக்கண்ணு!!
33
இயற்கையுடன் போராடும் நல்லக்கண்ணு
Image Credit : our own

இயற்கையுடன் போராடும் நல்லக்கண்ணு

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வீரபாண்டியன், “நல்லக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நல்லக்கண்ணு சிறு வயது முதலே போராட்ட குணம் கொண்டவர் தற்போது அவர் இயற்கையுடன் போராடி வருகிறது. இன்னும் சொல்லப்போனால் அவரிடம் இயற்கை மன்றாடிக் கொண்டிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
1.5 லட்சம் பேர் கலந்த திருமணம்.. 6 முறை ஆட்சி செய்த இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் மறுபக்கங்கள்
Recommended image2
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! ஹால் டிக்கெட் வெளியீடு! டவுன்லோட் செய்வது எப்படி?
Recommended image3
சினிமாவை மிஞ்சிய சம்பவம்! ஃபுல் மப்பில் தாறுமாறாக கார் ஓட்டிய இளைஞர்! கால் முறிந்து வலியால் துடித்த இருவர்.. பகீர் வீடியோ
Related Stories
Recommended image1
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்... வைகோ, நல்லக்கண்ணு, பிரேமலதா மீதான வழக்குகள் ரத்து... தமிழக அரசு அதிரடி...!
Recommended image2
37,500 ஏரிகளில், 5,000 ஏரிகள் காணவில்லை... பகீர் கிளப்பும் நல்லக்கண்ணு!!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved